2025 ஆம் ஆண்டு முதலீட்டு உலகில் தங்கம் தான் சூப்பர்ஹீரோ, எப்போதும் ஒரு வருடத்தின் இறுதியில் எந்த முதலீடு அதிகப்படியான லாபத்தை அளித்தது என கணக்கு போடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கணக்கே போடால் அனைவரும் கூறும் பதில் தங்கம், தங்கம், தங்கம் என்பது தான்.
தங்கம் லாபத்தை அள்ளிக்கொடுக்கிறதே, இனி வரும் காலக்கட்டத்தில் ரிஸ்க் நிறைந்த பங்குச்சந்தையை மொத்தமாக கைவிடலாமா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான பதிலை பல்வேறு நிதியியல் நிபுணர்கள் புட்டு புட்டு வைத்துள்ளனர்.

தங்கம் மீதான முதலீட்டில் இந்த ஆண்டு அதிகப்படியாக 65 சதவீதம் வரையில் லாபத்தை கொடுத்திருந்தாலும், தற்போதைய தங்கத்தின் விலையை வைத்து பார்க்கும் போது 40 சதவீத லாப அளவிலேயே உள்ளது. இதேகாலக்கட்டத்தில் நிஃப்டி 50 குறியீடு வெறும் 9.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக வெறும் பாதுகாப்பான முதலீடு என மட்டம் தட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம் இப்போது முதலீட்டாளர்களின் சிம்மசொப்பனமாக மாறியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் தங்கத்தை வாங்கி வைத்துள்ளவர்களுக்கு 2025ஆம் ஆண்டில் வரலாறு காணாத லாபம் கிடைத்துள்ளது.
2026ஆம் ஆண்டில் இதேபோன்ற லாபம் கொடுக்குமா என்பதை பார்ப்பதற்கு முன்பு பங்குச்சந்தை முதலீட்டை இனி தொடர வேண்டுமா அல்லது நிறுத்திவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யலாமா..? என்ற முக்கிய கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வோம் வாங்க.
தங்கத்தை வைத்துக்கொண்டு பங்குகளை தூக்கி எறியலாமா?
சந்தை நிபுணர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் கூறுவது என்னவென்றால் - தங்கம் அதிகப்படியான லாபம் தருகிறது, ஆனால் பங்குச் சந்தையை முதலீட்டை முழுவதுமாக தூக்கி எறியும் அளவுக்கு இல்லை. இதேபோல் தங்கம் ஒரு பாதுகாப்பு கவசமாக தான் பார்க்க வேண்டும், நீண்ட கால வளர்ச்சிக்கான இயந்திரமாக பார்க்க கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.
இதுக்குறித்து ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சித் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ராஜேஷ் பல்வியா கூறுகையில், தற்போதைய தங்க விலை உயர்வுக்கு உலக வங்கிகளின் அதிகளவிலான தங்க கொள்முதல், வர்த்தகப் போர் அச்சம் மற்றும் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை முக்கிய காரணமாக உள்ளது. இவை தங்கத்தை பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த கவசமாக மாற்றியுள்ளது.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் பங்குகள் தான் அதிக வளர்ச்சியைத் தரும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். குறுகிய காலத்தில் தங்கம் குறைந்த ஆபத்துடன் கைநிறைய லாபத்தை தந்திருக்கலாம், ஆனால் நீண்ட கால சொத்து உருவாக்கத்தில் பங்குகளுக்கு நிகர் வேறு இல்லை என்று நிபுணர்கள் ஒருமனதாகக் கூறுகின்றனர்.
தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்வது ஆபத்தா?
கடந்த 2023 முதல் 2025 வரையிலான காலத்தில் தங்கத்தின் விலை பெரிய உயர்வைக் கண்டதால் பல முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் 30 முதல் 50 சதவீதம் வரை தங்கத்தை வைத்திருந்தனர். இப்போது தங்க முதலீட்டு சந்தை அதிரடியான வளர்ச்சிகள் இல்லாமல் அமைதியடையத் தொடங்கியிருப்பதால் அதிகப்படியான பணத்தை தங்கம் மீது ஒதுக்கீடு செய்வதை குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
2025 முதல் 2030 வரையிலான காலத்தில் 5 முதல் 20 சதவீதம் வரையிலான தொகையை தங்கம் மீது ஒதுக்கீடு செய்வது போதுமானது என்று கூறப்படுகிறது. இதேபோல் தங்கம் விலை உயர்வு, அதற்கான டிமாண்ட் ஆகியவைற்றை கருத்தில் கொண்டு இந்த அளவீட்டை குறைக்கவோ அல்லது உயர்த்தலாம் எனவும் முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போது முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
நிபுணர்களின் பரிந்துரை மிகத் தெளிவாக உள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் 20 முதல் 25 சதவீதம் வரை தங்கத்தை வைத்திருக்கலாம். இது பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பையும் சந்தை வீழ்ச்சியின் போது உங்க முதலீட்டை பாதுகாக்கும்.
அதே சமயம் மீதமுள்ள பெரும் பகுதியை பங்குகளிலும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் வைத்து நீண்ட கால வளர்ச்சியைப் பெற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். இதேபோல் ஒவ்வொரு தனிநபருடைய ரிஸ்க் அளவீடுகளை பொருட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் அளவில் மாற்றம் ஏற்படும்.
மேலும் 30 சதவீதத்துக்கு மேல் தங்கத்தில் தங்களுடைய முதலீட்டை போடுபவர்கள் அதிக ஆபத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தங்கமும் வெள்ளியும் இன்னும் சில காலம் நன்றாக ஓடலாம், ஆனால் அதற்கேற்ற ஆபத்தும் உண்டு என்று கூறுகிறார்.
2025ஆம் ஆண்டில் தங்கம் மீதான முதலீட்டுக்கு கிடைத்த வெற்றி நிச்சயம் பிரமிக்க வைப்பது தான். ஆனால் இந்த ஒரு ஆண்டின் செயல்திறனை வைத்து நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை மாற்றக்கூடாது என்று அனைத்து நிபுணர்கள் அட்வைஸ் செய்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?



Click it and Unblock the Notifications