2024-ம் ஆண்டு தங்கம் விலை உயர்வு ஒரு சரித்திரத்தைப் படைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? 2024ல் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தங்கம் விலை டாலர் மதிப்பில் சுமார் 39 முறை புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இது 1979-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச உயர்வு என்பது இந்த வருடத்தின் சாதனை, 1979ஆம் ஆண்டு தங்கம் விலை சுமார் 57 முறை உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் திரட்டிய தரவுகள் படி இந்த தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது, இதனாலேயே டாலர் மதிப்பில் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த உயர்வு இந்தியாவில் மிகவும் கடுமையாக எதிரொலித்தது என்றால் மிகையில்லை. தங்கம் விலை 1979ஆம் ஆண்டு 10 கிராமுக்கு ரூ.950-லிருந்து 2024ஆம் ஆண்டில் அதிகப்படியாக ரூ.78,500 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை 2024-ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 23.5% சதவீதம் உயர்ந்துள்ளது. இது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டின் வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். இதன் மூலம் தங்கம் இந்த ஆண்டு அதிகம் லாபம் கொடுத்த முதலீடாக உருவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பல காரணங்கள் உள்ளன.
இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு என்பதால், அதன் விலை நிலவரம் சர்வதேச சந்தை மற்றும் டாலர் - யூரோ நாணயங்களின் மதிப்பு அடிப்படையில் தங்கம் விலை இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் உலகளவில் நிலவிய பொருளாதார நிலையற்ற தன்மை, மத்திய கிழக்கு நாடுகளில் போர் அச்சம், உலகளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கியது, சீனா மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிக தேவை இருந்தது போன்ற பல காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், தற்போதைய நிலை மற்றும் எதிர்கால சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, தங்கம் நீண்ட கால அடிப்படையில் எப்போதும் ஒரு பாதுகாப்பான முதலீடாகத் தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் என்பது ஒரு நீண்ட கால முதலீடாகும். இது பணவீக்கத்திற்கு எதிராகப் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது, அதேபோல் தங்கம் போன்று மாற்று முதலீட்டு தளமும் இதுவரையில் உருவாகவில்லை என்பதால் தங்கத்திற்கு உலகம் முழுவதும் முக்கிய இடம் உள்ளது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2700, 2600 பென்ச்மார்க் அளவீட்டைத் தாண்டி 2596 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலையின் டிசம்பர் மாத ஆர்டர் விலை 0.37 சதவீதம் குறைந்து 75,070 ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 147 ரூபாய் குறைந்து 7,729 ரூபாயாக உள்ளது, 22 கேரட் தங்கம் விலை 135 ரூபாய் குறைந்து 7,085 ரூபாயாக உள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை 1,080 ரூபாய் குறைந்து 56,680 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications