சென்னை: 2025ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தை நோக்கி அனைவரையும் படையெடுக்க செய்துள்ளது.
உயரும் தங்கம் விலை: உலக அளவிலும் இந்திய அளவிலும் தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு தங்கத்தை எட்டாக்கனியாக மாற்றி வருகிறது. இந்த சூழலில் இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கும் ஒரு அறிக்கையில் இந்தியாவில் ஜூன் மாதத்தில் நகை விற்பனை 60 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு தங்கம் விற்பனை இந்த அளவுக்கு குறைவது இதுவே முதன்முறை என இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம்: தங்கம் விலை பொருத்தவரை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே தான் இருந்து வருகிறது. 100 ரூபாய் இறங்கினால் 500 ரூபாய் ஏறுகிறது. எனவே சாமானிய மக்கள் தங்கம் வாங்கும் எண்ணத்தையே கைவிட்டு வருகின்றனர். தங்கத்தை நாம் நகையாக வாங்கும்போது அத்துடன் கூடுதலாக ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் உள்ளிட்டவற்றையும் சேர்த்து செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே தற்காலத்தில் ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் 80 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.
நகை விற்பனை சரிவு: நகை விற்பனையாளர்களும் பல்வேறு தள்ளுபடிகளையும் இலவசங்களையும் அறிவித்தாலும் கூட பொதுமக்களிடம் தங்கம் வாங்கும் போக்கு குறைந்து வருவதாக இந்திய நகை விற்பனையாளர்களின் கூட்டமைப்பின் தேசிய செயலாளரான சுரேந்திர மேத்தா தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சிறிய அளவில் நகைக்கடையை நடத்துபவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என கூறுகிறார்.
14 கேரட் தங்கம்: நகை விற்பனை குறைந்ததால் தங்க நகை உற்பத்தியை தற்காலிகமாக குறைத்து இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதனிடையே நகை விற்பனையாளர்கள் மக்களிடையே தங்க நகை வாங்கும் போக்கை ஊக்குவிப்பதற்காக பல்வேறு புதிய யுத்திகளை கையில் எடுத்திருக்கின்றனர். அந்த வகையில் 14 கேரட் தங்க நகை விற்பனையை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி முன்னிலைப்படுத்துகிறார்கள்.

விலை குறைவு என்பதால் வரவேற்பு: தற்போது நாம் வாங்கக்கூடிய ஆபரண தங்கம் 22 கேரட் கொண்டது. இதன் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் நகை விற்பனையாளர்கள் 14 கேரட் தங்க நகைகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு தீவிரம் காட்டுகின்றனர். இது 22 கேரட் தங்கத்துடன் ஒப்பிடும்போது விலை குறைவாக இருக்கிறது, இது சாமானிய மக்களை மீண்டும் தங்க நகையை வாங்கும் பழக்கத்தை நோக்கி திரும்பி வர வைக்கும் என எண்ணுகிறார்களாம்.
இளம் வயதினர் வரவேற்பு: அனைத்து இந்திய நவரத்தின மற்றும் நகை கவுன்சில் தலைவர் ராஜேஷ் இந்தியாவில் தற்போது 14 கேரட் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் இந்த 14 கேரட் தங்க நகை வாங்கும் போக்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறார். இந்த ட்ரெண்ட் அப்படியே நீடிக்கும் என நம்புவதாக தெரிவித்திருக்கும் அவர் லைட் வெயிட் நகைகளுக்கு மக்கள் மத்தியில் தற்போது வரவேற்பு இருப்பதாக கூறுகிறார்.
14 கேரட் தங்கம் விலை என்ன?: சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும் ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுவே 14 கேரட் தங்கம் ஒரு கிராம் 5820 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,556 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தங்க நகை தான் அணிய வேண்டும் என எண்ணுபவர்களுக்கு குறைந்த விலைக்கே தங்கம் வாங்கும் வாய்ப்பை இவை ஏற்படுத்தி தருகின்றன.
9 கேரட் தங்க நகை: இதனிடையே இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு இந்திய தர நிர்ணய அமைப்பான பிஐஎஸ் -யிடம் 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க் வழங்கும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம். இதற்கான ஒப்புதல் கிடைத்தால் இந்திய சந்தையில் 9 கேரட் தங்க நகைகள் விற்பனைக்கு வரும். இது இன்னும் குறைந்த விலையில் இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த வகையிலான நகைகளை வாங்குவதற்கு முன் வருவார்கள் என நகை விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?



Click it and Unblock the Notifications