பொதுவாகத் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் தீபாவளி காலத்தில், இந்த ஆண்டு தங்க விலை உயர்வு காரணமாகத் தேவை குறையலாம் என்று நகைக்கடை உரிமையாளர்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.
10 கிராம் தங்கத்தின் விலை ரூ.80,000-ஐ நெருங்கியுள்ளதால், புதிதாகத் தங்க நகைகள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்த்து, பழைய நகைகளை மாற்றிக்கொள்ளும் போக்கை அதிகரித்துள்ளனர். இதேபோல் மக்கள் நிதி தேவை காரணமாக பல வருடமாகச் சேமித்த தங்க நகைகளை விற்பனை செய்து நிதி திரட்டும் போக்கு அதிகரித்துள்ளது.

சென்கோ கோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுவன்கர் சென் கூறுகையில், இந்த வருடம் தீபாவளி காலத்தில் தங்க விற்பனை அளவு 10-12% குறையும் என்று கணித்துள்ளார். இருப்பினும், விலை அதிகரிப்பால் தங்கம் விற்பனை மதிப்பு சிறிய அளவிலான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்
மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) தரவுகளின்படி, 24 கேரட் தங்கத்தின் (99.5% தூய்மை) ஸ்பாட் விலை இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 34% உயர்ந்து, கடந்த மாதத்தில் மட்டும் விலை 6% அதிகரித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 73,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 79,640 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 58,400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 2000 ரூபாயும், கிராமுக்கு 2 ரூபாயும் உயர்ந்து 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 150 ரூபாய் உயர்ந்து 27,530 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் பெரிய அளவிலான வட்டி விகிதங்களைக் குறைக்கும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியும் கடந்த வாரம் தனது நாணய கொள்கை கூட்டங்களில் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
அதை தொடர்ந்து அமெரிக்க தேர்தலில் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார் என்பதில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் காரணத்தாலும், இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக முதலீட்டு சந்தையில் தடுமாற்றம், ஆகியவை தங்கத்திற்கான டிமாண்டை அதிகரித்துள்ளது.
இவை அனைத்தும் தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பித்தக்கது. ஒருவேளை டிரம்ப் வெற்றி பெற்றால், டாலர் பலவீனமடையலாம், இது தங்கம் விலையை மேலும் உயர்த்தும் என்ற கணிப்பு உள்ளது.
தங்கம் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்ந்து வருகிறது, அதே நேரத்தில் வெள்ளி விலை பின்தங்கி இருந்தது, ஆனால் இன்று வெள்ளி விலையும் வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் வெள்ளி மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications