இந்தியாவில் பணவீக்க பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நேரத்திலும் தங்க விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுத் தந்தேராஸ் பண்டிகையின் போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு (நவம்பர் 22, 23) ஆகிய இரண்டு நாட்களில் இந்த ஆண்டுத் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையின் போது தங்கம் வாங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளனர் மக்கள்.
மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டாலும் தந்தேராஸ் பண்டிகையின் போது இலகுரக மற்றும் அதிக எடை கொண்ட நகைகள் விற்பனை அதிகரித்துள்ளது
திருமணச் சீசன்
நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை நடக்கவிருக்கும் திருமணச் சீசன் காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் மணப்பெண் மற்றும் மணமகன்களுக்களுக்கான நகைகள் வாங்கியதன் காரணமாக விற்பனை அதிகரித்து உள்ளது.
ஆன்லைன் விற்பனை
இதேபோல் இளம் தலைமுறையினர் ஆன்லைனில் தங்கத்தை வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருக்கும் காரணத்தால் இந்தப் பண்டிகை காலத்தில் டிஜிட்டல் தளங்கள் தங்கம் மற்றும் தங்க விற்பனை 35-40 சதவீதம் வரையிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தங்கம் விலை
சமீபத்தில் உலக நாடுகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் முதலீடுகள் பெரிய அளவில் பத்திர சந்தைக்கு மாறியது, இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறையத் துவங்கியது. இதன் எதிரொலியாக தங்கம் விலை சரிவு தந்தேராஸ் பண்டிகையின் போது தங்கம் விற்பனையை அதிகரித்துள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
தந்தேராஸ் பண்டிகையின் போது 10 கிராம் 22 கேரட் தங்கம் இந்தியாவில் சராசரியாக 45,857 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவது தென்னிந்திய மாநிலங்கள் தான், தந்தேராஸ் பண்டிகையின் போது வைரம், ரத்தினங்கள் பதிக்கப்படாத தங்க நகைகளின் விற்பனை அதிகமாக இருந்தது.
35 சதவீதம் அதிகம்
தென்னிந்திய மாநிலங்களில் ஜோயாலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கொல்கத்தாவின் சென்கோ கோல்ட் அண்ட் டைமெண்ட்ஸ் கடைகள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 முதல் 35 சதவீதம் அதிகத் தங்க விற்பனையை எதிர்கொண்டு உள்ளது.
குபேரன் மற்றும் லக்ஷ்மி
தந்தேரஸ் அல்லது தந்த்ரயோதசி பண்டிகையில் செல்வத்தின் கடவுளான குபேரன் மற்றும் லக்ஷ்மி-யை வணங்குவதற்காகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த நாளில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்குவதன் மூலம் தங்களது செல்வமும் பெருகும் என நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications