இந்திய தங்கம் விற்பனை சந்தையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து வருகிறது, பொதுவாக இந்திய மக்கள் இந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத துவக்கத்தில் அதாவது பொங்கல் பண்டிகை காலத்தில் அதிகமாக தங்கம் வாங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு மந்தமாக இருந்த தங்க விற்பனை, பண்டிகைக்கு பின்பு களைகட்டியுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் தற்போது மக்கள் அதிகமாக தங்கம் வாங்கி வருவதால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு இணையாக சர்வதேச சந்தையிலும் தங்க விலை உயர்ந்து வருகிறது. இதற்கு 2 முக்கியமான காரணம் உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்த தங்கம் மீதான வரி குறைப்பை, இந்த பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்தப்படும் என சந்தையில் கருத்து நிலவுகிறது.
இதனால் மக்கள் தங்கம் விலை உயர்வதற்கு முன்பே வாங்கும் முடிவின் காரணமாக தங்கம் அதிகம் வாங்கி வருகின்றனர். இதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் வேளையில் முதலீட்டு சந்தையில் ஏற்படும் தடுமாற்றத்தால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது மூலம் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் தங்கம் அதிகளவில் வாங்கப்பட்டது, இது நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வரி மீண்டும் திருத்தம் செய்யப்படலாம் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதன் எதிரொலியாக மும்பையின் மிகப்பெரிய தங்க விற்பனை சந்தையான ஜவேரி பஜாரில் தங்கம் அதிகமாக விற்கப்படுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பின்பு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 60-70% வரை அதிக வாடிக்கையாளர் தங்கத்தை வாங்க வந்துள்ளனர்.
குறிப்பாக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கத்தின் தேவை 15% அதிகரித்ததுள்ளது என்று ஜவேரி பஜார் வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை டிசம்பர் 2024 இல் 21.94 பில்லியன் டாலராக இருந்தது. இது நவம்பர் மாதத்தை விட குறைவானது என்றாலும், இன்னும் அரசை அச்சுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications