தங்கம் விலை உயர்வினால் என்ன நடந்திருக்கு பார்த்தீங்களா? நம்ம மக்கள் எப்பவுமே உஷார் தான்!!

2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. இதற்கு பல்வேறு சர்வதேச காரணிகளை நாம் காரணமாக கூறலாம். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், அமெரிக்க பொருளாதார மந்த நிலை, பல்வேறு நாட்டு வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்தது என்பன உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தை நோக்கி திருப்பி விட்டனர்.

செப்டம்பரில் உச்சம்: குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. இந்தியாவைப் பொறுத்தவரை செப்டம்பர் மாத இறுதியில் தசரா பண்டிகை தொடங்கியது. அடுத்ததாக தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகைகள் வரும். இந்தியாவில் அடுத்த மூன்று, நான்கு மாதங்கள் பண்டிகை காலமாகவே இருக்கும். பொதுவாகவே இந்தியாவில் பண்டிகை காலம் என்றாலே தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு தசரா பண்டிகையில் எதிர்பார்த்த அளவு தங்கம் விற்பனை நடைபெறவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

தங்கம் விலை உயர்வினால் என்ன நடந்திருக்கு பார்த்தீங்களா? நம்ம மக்கள் எப்பவுமே உஷார் தான்!!

தசராவில் நடந்தது என்ன?: தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்க வாங்க முன்வரவில்லை என இந்திய தங்க நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை என்பது பெருமளவு குறைந்து இருக்கிறதாம். கடந்த ஆண்டு தசரா பண்டிகையின் போது இந்தியாவில் 24 டன்கள் தங்கம் விற்பனையாகி இருக்கிறது , ஆனால் இந்த ஆண்டு அது 18 டன்களாக குறைந்து இருக்கிறது .

கடந்த ஆண்டை விட 48% உயர்வு: 2024 ஆம் ஆண்டு தசரா பண்டிகையின் போது இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 78 ஆயிரம் ரூபாய் அதுவே இந்த ஆண்டு தசரா பண்டிகை நாளில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,16,000 ரூபாய் அதாவது கடந்த ஆண்டு தசராவுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தசரா அன்று இந்தியாவில் சில்லறை விற்பனையில் தங்கத்தின் விலை 48% உயர்ந்திருக்கிறது. இது தவிர தங்கத்தை நகையாக வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள் அதற்கு கூடுதலாக 3 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் அத்துடன் நகைக்கான செய்கூலி சேதாரம் 15 லிருந்து 30 சதவீதம் வரை இருக்கும்.

இந்த ஆண்டு நிலவரம்: தங்கத்தின் விலை இப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருப்பதால் மக்கள் இந்த ஆண்டு தசரா பண்டிகையின் போது தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தங்கம் விற்பனை செய்யப்பட்ட மொத்த மதிப்பு 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் விலை உயர்வுதான்.

தங்கம் விலை உயர்வினால் என்ன நடந்திருக்கு பார்த்தீங்களா? நம்ம மக்கள் எப்பவுமே உஷார் தான்!!

மக்கள் மனநிலை: ஆனால் எவ்வளவு தங்கம் விற்கப்பட்டது என பார்த்தால் அது குறைந்து இருக்கிறது . தசரா பண்டிகை நாளில் தங்கம் வாங்குவது தங்களுக்கு பெரிய அளவிலான ஒரு வளத்தை கொண்டு வரும் நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வு பலருக்கும் அதனை எட்டாக்கனியாக மாற்றி விட்டது . இந்த தசராவில் தங்க நகை வாங்கியவர்களை விட தங்க நாணயங்களை வாங்கியவர்கள் தான் அதிகம் என நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

எது அதிகமாக விற்கப்பட்டது: தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களில் முதலீட்டு நோக்கத்தில் அதிகமானவர்கள் வாங்கி வைத்தார்கள் , தங்கத்தை பொருத்தவரை 5 கிராம் தங்க நாணயமும் 20 கிராம் வெள்ளி நாணயமும் அதிகமாக விற்பனையானது என பிஎன்ஜி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்திருக்கிறார் . மேலும் லைட் வெயிட் எனப்படும் குறைந்த காரட் அளவு கொண்டு தங்க நகைகளின் விற்பனை சூடு பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் இந்த ஆண்டு பெரும்பாலான நகை விற்பனை என்பது பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிதாக வாங்கியதாக தான் இருந்தது என தெரிவிக்கிறார் .

உஷாரான மக்கள்: மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தை போட்டு நகையை வாங்கவில்லை அதற்கு மாற்றாக பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்துதான் வாங்கினர். இதுதான் கிட்டத்தட்ட 50 சதவீத விற்பனைக்கு வித்திட்டது என கூறுகிறார். தென்னிந்தியாவில் இந்த முறை தங்கத்தின் விற்பனை என்பது குறைந்திருப்பதாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். எக்னாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பலரும் தங்கத்தை நகையாக வாங்காமல் தங்க பார்களாகவும் நாணயங்களாகவும் வாங்கி வைப்பதை பார்க்க முடிந்ததாக கூறுகிறார். தென்னிந்திய நகரங்களை பொருத்தவரை 10 முதல் 20 கிராம் வரையிலான தங்க பார்கள் அதிகம் விற்பனையானதாகவும், பழைய நகையை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போக்கு கிட்டத்தட்ட 60% உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+