Gold: இந்தியாவில் தங்க நகை தயாரிப்பில் மிகப்பெரிய மோசடி.. சீனாவின் சேட்டை அம்பலமானது.. மக்களே ஷாக்..!!

இந்தியத் தங்க நகைச் சந்தையில் ஒரு புதிய மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது, நாம் நகைக் கடையில் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரையையே ஏமாற்றும் வகையிலும், இந்தியாவில் தங்கத்தின் தூய்மையைப் பரிசோதனை செய்யும் தொழில்நுட்பத்தையும் மீறி மோசடி செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

பொதுவாகத் தங்கத்துடன் வேறு உலோகத்தைக் கலந்தால் இதைப் பரிசோதனை செய்யும்போதோ அல்லது நிறம், தன்மை வாயிலாகவோ தெரிந்துகொள்ள முடியும். ஆனால் எவ்விதமான சந்தேகத்தை ஏற்படுத்தாத ரீனியம் (Rhenium) என்ற உலோகத்தைத் தங்கத்துடன் கலந்து விற்பனை செய்யும் புதிய மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Gold: இந்தியாவில் தங்க நகை தயாரிப்பில் மிகப்பெரிய மோசடி.. சீனாவின் சேட்டை அம்பலமானது.. மக்களே ஷாக்..!!

உதாரணமாக, ரீனியம் கலந்து செய்யப்பட்ட ஒரு 20 கேரட் தங்க நகையை, HUID சான்றிதழுக்காகப் பரிசோதனைக்கு அனுப்பும் போது அது 22 கேரட் என சான்றளிக்கப்படும் அளவுக்கு மோசடி செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது.

இதனால் தங்கம் நகை வாங்கும் சாமானிய மக்கள் மட்டுமின்றி, பழைய தங்கத்தை வாங்கி மறு விற்பனை செய்யும் நகைக்கடைகளும் இதன் மூலம் பெரும் இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த மாபெரும் மோசடியின் பிறப்பிடம் சீனா என்பது அடுத்த அதிர்ச்சியான விஷயம்.

ரீனியம் (Rhenium) என்றால் என்ன?

ரீனியம் என்பது ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின்களை தயாரிப்பிலும், பெட்ரோலியம் சுத்திகரிப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு மிக்க உலோகமாகும்.

இந்த உலகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது தங்கத்தைக் காட்டிலும் அதிக அடர்த்தி கொண்டது. இதனால் தங்கத்தில் சேர்க்கப்படும் போது தங்கத்தின் கடின தன்மை பாதிப்பு அடையாது, ஆனால் மற்ற உலோகத்தைச் சேர்க்கும் போது அதன் அடர்த்தி, நிறம் போன்றவை மாறும்.

மேலும் ஒரு கிராம் ரீனியம் விலை வெறும் 600 ரூபாய். இதுவே ஒரு கிராம் தங்கத்தின் விலை 15000 ரூபாய்.

ஸ்பெஷல் ஆப்ரேஷன்

டைனிக் பாஸ்கர் ராஜஸ்தானில் செய்த ஆப்ரேஷனில், 7.83 கிராம் 24 கேரட் தங்கத்துடன், சீன சப்ளையரிடம் வாங்கிய 1 கிராம் ரீனியம் உலோகத்தைச் சேர்த்து, வழக்கமாக ராஜஸ்தானி நகை தயாரிப்பில் பயன்படுத்தும் 0.75 கிராம் உலோகத்தைச் சேர்த்து மொத்தம் 9.58 கிராம் எடையில் நகையாக ஜோத்பூர் நகைக்கடைக்காரர் மூலம் தயாரித்துள்ளது.

இந்த நகையை ஹால்மார்க்கிங் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. சோதனை முடிந்த பின்பு, இந்த நகைக்கு 22 கேரட் நகை என சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த நகையில் 81.7 சதவீதம் அதாவது 20 கேரட்-க்கான தங்கம் மட்டுமே உள்ளது.

மேலும் தங்க நகை பரிசோதனைக்காகப் பயன்படுத்தும் XRF இயந்திரத்தில் சோதனை செய்யும் போது 93.7 சதவீதம் தங்கம் இருப்பதாகக் காட்டியுள்ளது. ஆனால் இதில் ரீனியம் இருப்பதைக் காட்டவில்லை.

ரீனியம் கலப்பது மூலம் ஒவ்வொரு 10 கிராமுக்கும் சாமானிய மக்கள் 15000 ரூபாயை இழக்கின்றனர். எப்படி இயந்திரங்கள் இதை கண்டுபிடிக்கத் தவறியது என்பது தான் பெரும் கேள்வி.

Gold: இந்தியாவில் தங்க நகை தயாரிப்பில் மிகப்பெரிய மோசடி.. சீனாவின் சேட்டை அம்பலமானது.. மக்களே ஷாக்..!!

தங்க பரிசோதனை இயந்திரங்களால் ஏன் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை?

பொதுவாகத் தங்க நகையின் தூய்மையைக் கண்டறியப் பயன்படுத்தும் XRF இயந்திரம், தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் தன்மையைக் கண்டறிய எக்ஸ் ரே கதிர்களைப் பயன்படுத்துகிறது.

எக்ஸ் ரே கதிர்கள் ஒரு உலோகத்தின் மீது விழும்போது அந்த உலோகத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பை அலைகளாக (WAVE) ரெக்கார்டு செய்யப்படும். அதன் அடிப்படையில் தான் ஒரு தங்க நகையில் எவ்வளவு தங்கம், வெள்ளி, காப்பர், ஜிங்க் உள்ளிட்ட உலோகங்கள் உள்ளது எனக் கணக்கிடப்படுகிறது.

ஆனால் ரீனியம் என்ற உலோகத்தின் எக்ஸ் ரே பிரதிபலிப்பு என்பது ஜிங்க் உலோகத்திற்கு இணையானதாக இருக்கும் என்பதால் ரீனியம் அளவை ஜிங்க் ஆக கணக்குக் காட்டப்படுகிறது.

ஒரு 22 காரட் (916) நகை எப்படி இருக்கும்?

உண்மையான 22 கேரட் நகையில் 91.6% தங்கமும், மீதமுள்ள 8.4% மற்ற உலோகங்களும் இருக்கும். அதாவது
தூய தங்கம் - 9.16 கிராம்
மற்ற உலோகங்கள் (காப்பர் அல்லது ஜிங்க்) - 0.84 கிராம்
மொத்த எடை - 10.00 கிராம்

ரீனியம் கலப்படம் செய்யப்பட்ட நகை எப்படி இருக்கும்?

இதே 10 கிராம் நகையைத் தயாரிக்கும்போது, மோசடியாளர்கள் தங்கத்தின் அளவைக் குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக ரீனியத்தைச் சேர்க்கிறார்கள்.

தூய தங்கம் - 8.16 கிராம்
ரீனியம் - 1.00 கிராம்
மற்ற உலோகங்கள் (காப்பர் அல்லது ஜிங்க்) -0.84 கிராம்
மொத்த எடை: 10.00 கிராம்

Gold: இந்தியாவில் தங்க நகை தயாரிப்பில் மிகப்பெரிய மோசடி.. சீனாவின் சேட்டை அம்பலமானது.. மக்களே ஷாக்..!!

இங்கேதான் சூட்சுமம் உள்ளது..

ஜிங்க் மிகவும் லேசான உலோகம் அதாவது அதன் அடர்த்தி குறைவு, ஆனால் ரீனியம் தங்கத்தை விட கடினமான உலோகம், ஜிங்க் காட்டிலும் 3 மடங்கு அதிகம் அடர்த்தி கொண்டது.

ஒரு தங்க நகையில் 1 கிராம் ஜிங்க் சேர்க்கப்படும் போது, அது பெரிய இடத்தை எடுத்துக்கொண்டு நகையின் வடிவத்தையும் அடர்த்தியையும் மாற்றிவிடும். இதன் மூலம் XRF பரிசோதனையில் எளிதில் மாட்டிக்கொள்ளும். ஆனால் 1 கிராம் ரீனியம் மிகச்சிறிய இடத்திலேயே 1 கிராம் தங்கத்திற்கு இணையான எடையைக் கொடுத்துவிடும்.

இப்படியிருக்கையில் XRF இயந்திரத்தில் பரிசோதனை செய்யும் போது, ரீனியத்தின் எக்ஸ் ரே கதிர்வீச்சு அளவு ஜிங்க்-கிற்கு இணையாக இருக்கும் என்பதால், கலக்கப்பட்ட ரீனியம் ஜிங்க் இல்லாத காரணத்தால் அதைத் தங்கத்தின் அளவாகக் காட்டும்.

தங்க நகையின் தூய்மையை அளவிடும் இயந்திரத்தின் மென்பொருள் ரீனியம் உலோகத்தைத் தனியாக அடையாளம் செய்ததது தான் இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம்.

இதை விட முக்கியமாக ரீனியம் உலோகம் தற்போது தடை செய்யப்பட்ட உலோகங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தான், இந்தியாவில் மிகப்பெரிய தங்க நகை சந்தை இருக்கும் போது இத்தகைய உலோகத்தைத் தடை செய்யப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யவில்லை.

சீனாவில் வெளியான உண்மை..

இத்தகைய மோசடி நடப்பதாக முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது சீனாவில் தான். இந்த வருடம் ஏப்ரல் மாதம் சீன அரசு தொலைக்காட்சியில் XRF இயந்திரத்தால் ரீனியம் வைத்து ஏமாற்ற முடியும் என அறிந்த ஒரு கூட்டம் 8 லட்சம் யுவான் அளவிலான மோசடி செய்து நகைகளை விற்பனை செய்துள்ளது என அறிவித்தது.

இந்த மோசடி குறித்த டைனிக் பாஸ்கர் விசாரணையில் சீனாவின் ஷென்சன் ஏஜென்ட் இந்தியாவில் தனக்கு டீலர்கள் இருப்பதாகக் கூறியதும் தெரிய வந்துள்ளது.

2005ஆம் ஆண்டு தங்க நகை தயாரிப்பில் 4 உலோகங்களைக் கலந்து ஏமாற்ற முடியும் என இந்திய அரசு கண்டறிந்தது மூலம் iridium, cadmium போன்ற உலோகங்களைத் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தது. தற்போது 5வது உலோகமாக ரீனியம் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+