தங்கம், வெள்ளி விலை குறைஞ்சிடுச்சு.. இப்போதாவது நகை வாங்கலாமா..? வேண்டாமா..?

சென்னையில் இன்று தங்கம் விலை தொடர் உயர்வுக்கு பின்பு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,600 அருகே இருந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பெற முடிவு செய்து தங்கத்தை விற்பனை செய்த காரணத்தால் விலை சரிந்தது. இது தொழில்நுட்ப ரீதியான சரிசெய்தல் (technical correction) என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறைந்த விலையில் வாங்கியவர்கள் லாபம் பார்த்து விற்றதால் விலை சரிந்துள்ளது.

இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்தும் பெரும் சரிவை பதிவு செய்தது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் இருக்கும் பெரும் குழப்பம் விலை குறைஞ்சிடுச்சே, இப்போதாவது நகை வாங்கலாமா..? வேண்டாமா..? என்பது தான். இதற்கான பதில் என்ன..?

தங்கம், வெள்ளி விலை குறைஞ்சிடுச்சு.. இப்போதாவது நகை வாங்கலாமா..? வேண்டாமா..?

சென்னையில் இன்றைய 24 காரட் தங்க விலை ஒரு கிராமுக்கு ரூ.17,673 ஆக உள்ளது. இது நேற்றை விட ரூ.655 குறைந்துள்ளது. 10 கிராம் தங்கம் ரூ.1,76,730ஆகவும், 100 கிராம் ரூ.17,67,300ஆகவும் வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.16,200ஆக (நேற்றை விட ரூ.600 குறைவு) உள்ளது. 18 காரட் தங்கம் ரூ.13,500ஆக (ரூ.400 குறைவு) வர்த்தகமாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.415ஆக உள்ளது. நேற்றை விட ரூ.10 குறைந்துள்ளது. 10 கிராம் வெள்ளி ரூ.4,150ஆகவும், 1000 கிராம் ரூ.4,15,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் விலை ஒரு கிராமுக்கு ரூ.7,393ஆக குறைந்துள்ளது (நேற்றை விட ரூ.657 குறைவு).

இத்தகைய சூழ்நிலையில் சந்தை ஆய்வாளர்கள் கூறுவது என்ன..? தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை குறைந்துள்ள நிலையில் இப்போது வாங்கினால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.

இதேவேளையில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரே நேரத்தில் அதிகளவில் அளவில் வாங்குவதை விட படிப்படியாக (staggered buying) வாங்குவது புத்திசாலித்தனம். இந்த சரிவு சிறந்த விலையில் நுழைய வாய்ப்பாக இருந்தாலும், குறுகிய கால வர்த்தகர்களுக்கு ஏற்ற இறக்கம் தொடரலாம். இந்த தடுமாற்றத்தில் பெரிய இழப்பை தவிர்ப்பதே புத்திசாலிதனம். இதனால் படிப்படியாக வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும். அதிக விலையில் வாங்கியவர்கள் இழப்பை சந்திக்கலாம்.

இதேபோல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நீண்டகால போக்கு உயர்வாகவே உள்ளது. எனவே பீதியடைந்து வாங்குவதோ, நீண்ட நாட்கள் காத்திருப்பதோ சரியல்ல. படிப்படியாக வாங்குவதே சிறந்த அணுகுமுறை. இத்தகைய அணுகுமுறையில் வாங்குவோருக்கு உலோகம் தொடர்பான மியூச்சுவல் பண்ட், ஈடிஎப் மூலம் முதலீடு செய்வதும் சிறந்த வாய்ப்பாக அமையும்.

சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்கள் தங்கம் வாங்க திட்டமிடும்போது தினசரி விலை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம். தமிழ்நாட்டில் திருமண சீசன் துவங்கியிருக்கும் நிலையில் இந்த சரிவு பலருக்கு நிவாரணமாக அமையலாம். இதேபோல் நகை கடையில் தற்போது நகைகளாக வாங்குவதை காட்டியும், காயின், பார்களாக தங்கம்/வெள்ளியை வாங்குவது அதிகரித்துள்ளது என சந்தை நிலவரம் கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+