ராமர் பக்தர்களை கவர நகை கடைக்காரர்களின் செம ஐடியா.. அயோத்தியில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புதுக்கடை ..!!

இந்தியாவில் அனைத்து வர்த்தக அமைப்புகளும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இது தொடர்பான வர்த்தக வாய்ப்புகளைப் பெறத் துவங்கியுள்ளனர். பல நிறுவனங்கள் ராமர் கோயிலின் படத்தைக் கொண்டு பேகேஜ் செய்வது முதல் ஜனவரி 22 ஆம் தேதி சிறப்புத் தள்ளுபடி வரையில் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் டிரெண்டிங்கில் தற்போது தங்கமும் வெள்ளியும் சேர்ந்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கும் மக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதற்கும் எப்படித் தொடர்பு உருவாகிறது எனக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

ராமர் பக்தர்களை கவர நகை கடைக்காரர்களின் செம ஐடியா.. அயோத்தியில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புதுக்கடை ..!!

அயோத்தி ராமர் கோயில் டிரெண்டை பணமாக்கவே அனைத்து வர்த்தக அமைப்புகளும் முயன்று வரும் வேளையில் நாட்டின் முன்னணி நகைக் கடைக்காரர்கள் மற்றும் தங்க டீலர்கள் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்குப் பிரத்தியேக டிசைன் கொண்ட தங்க நாணயம், வெள்ளி நாணயம், நினைவுப் பொருட்களை ராமர் முகம், ராமர் கோயில் வடிவம் கொண்டு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

ராமர் முகம், ராமர் கோயில் வடிவம் கொண்ட தங்க நாணயம், வெள்ளி நாணயம், நினைவுப் பொருட்களை அயோத்தியில் மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யத் துவங்கப்படுகிறது. தங்கத்தைச் சேமிப்பிற்காக வாங்குவோர்கள் தற்போது அதிகளவில் தங்க நாணயங்களாக வாங்கும் வேளையில் இத்தகைய முயற்சி ராமரின் தீவர பக்தர்களாக இருப்போர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராமரின் தர்பாரை சித்தரிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் முதல், அயோத்தியில் உள்ள புதிய ராமர் கோவில் வளாகம், ராமாயணத்தால் ஈர்க்கப்பட்ட நகைகள் மற்றும் மினியேச்சர்கள் வரையில் பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி மற்றும் நகை கடை பிராண்டுகள் அடுத்த சில வாரங்களில் அயோத்தியில் மட்டும் விற்கப்படும் இந்தப் பொருட்களை இந்தியா முழுக்க விற்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் தங்க விற்பனை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் பிப்ரவரி மாத தொடக்கத்தில் அயோத்தியில் ஒரு கடையைத் திறக்கவுள்ளது. இந்த ஷோரூமில் 4 - 30 கிராம் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் இருக்கும், அதில் ராமர் முக்கிய உருவமாக இருப்பார்.

இந்த நாணய சேகரிப்பு எங்கள் அயோத்தி ஷோரூமுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்க உள்ளோம், ஏனெனில் வாடிக்கையாளர்கள் அயோத்திக்கு வரும்போது, அவர்கள் ஒரு நினைவுப் பரிசை எடுத்துச் செல்ல இது சிறந்த தேர்வாக இருக்கும். அதற்காக எங்கள் ஷோரூமில் இந்த வகையான நாணயங்களை மக்களின் பார்வைக்காக வைக்கப்போகிறோம் என்று இதன் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறினார்.

இதேபோல் கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட சென்கோ கோல்டு அண்ட் டயமண்ட்ஸ், ராமர் முகம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட டாலர்கள் மற்றும் நெக்லஸ்கள் 'சியாராம்' கலெக்ஷனில் வெளியிட திட்டமிட்டு உள்ளது.

இதற்கிடையில் டிஜிட்டல் தங்க விற்பனை தளமான ஆக்மாண்ட் கோல்ட், 'ஸ்ரீ ராம் மந்திர் காயின் கிட்' என்ற ஒன்றை 52,000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏழு கிராம் தங்க நாணயம் தவிர, கோவிலின் மினியேச்சர் மற்றும் அயோத்தியின் ஒரு மண் ஆகியவை அடங்கும்.

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படுவது ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை தாண்டி முக்கிய வர்த்தக வாய்ப்பாக மாறியுள்ளது, ஜனவரி 22 ஆம் தேதி மட்டும் அயோத்தியில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகும் என CAIT அமைப்பு கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+