தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வெள்ளிக்கிழமை இந்திய ரீடைல் சந்தையில் பெரும் சரிவை பதிவு செய்ததை தாண்டி, அமெரிக்க வர்த்தக சந்தையில் ரத்தகளறியானது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்தம் விலை டமாளென சரிய ஒரேயொரு முக்கிய காரணம் டிரம்ப் தேர்வு செய்த புதிய பெட் தலைவர் தான்.
ஒரு ஒரு விஷயத்தால் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலை 24 மணிநேரத்தில் கடுமையாக சரிந்தன. சமீபத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பிறகு, தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த பெரும் திருப்பம் உலக சந்தைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தையில் தங்க ஃபியூச்சர்ஸ் 9 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 4,800 டாலராக குறைந்தது. இதேபோல் வெள்ளி பியூச்சர்ஸ் தடாலடியாக 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்தது. இது 2008க்குப் பிறகு வெள்ளியின் மிகப்பெரிய ஒரு நாள் இறக்கமாகும்.
தங்க விலை 5,500 டாலருக்கு மேல் இருந்த விலை தற்போது 4,800 டாலருக்கு குறைந்தது. வெள்ளி 120 டாலருக்கு மேல் இருந்து 87 டாலராக வந்தது. இந்த சரிவு பொதுவான சந்தை விற்பனையாக பார்க்கப்பட்டாலும், இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. டிரம்ப் நியமித்த புது பெட் தலைவர் அமெரிக்க நிதி நிலையை டார்கெட் செய்யு கடுமையான நாணய கொள்கையை நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரித்துள்ளது, டாலர் மதிப்பும் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடு பத்திர சந்தைக்கும், தங்கம் - வெள்ளியில் இருக்கும் முதலீடுகள் டாலருக்கும் மாறியுள்ளது. இதன் வாயிலாகவே முதலீட்டாளர்கள் கிடைத்த வரையில் போதும் என முடிவு செய்து தங்கம் - வெள்ளி முதலீடுகளை விற்று வருகின்றனர். இதனால் இன்று அமெரிக்க பங்குச் சந்தை முழுவதும் இறக்கம் காணப்பட்டது.
ப்ளூம்பெர்க் மூத்த பொருளாதார ஆய்வாளர் மைக் மெக்லோன் கூறுகையில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் வரலாற்று ரீதியாக இத்தகைய உயர்வுகளுக்குப் பிறகு பெரிய சரிவு வருவது வழக்கம். இந்த ஆண்டு தங்கம் 11 சதவீதமும் வெள்ளி 28 சதவீதமும் உயர்ந்திருந்தன. கடந்த வாரம் கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் ஆண்டு இறுதியில் தங்கம் $5,400ஐ எட்டும் என்று கணித்திருந்தனர். ஆனால் இப்போது ஏற்பட்ட சரிவு அந்த எதிர்பார்ப்பை பாதித்துள்ளது.
தங்கம் - வெள்ளி மட்டும் அல்லாமல் காப்பர் போன்ற பிற உலோகங்களும் சரிந்தன. லண்டனில் காப்பர் $14,000க்கு மேல் சென்ற பிறகு 4 சதவீதம் குறைந்தது.
இந்தியாவில் MCX சந்தையிலும் இதே போன்ற சரிவு காணப்பட்டது. தங்க விலை (24 காரட் 10 கிராம்) ரூ.1,80,779 உச்சத்திலிருந்து சரிந்து ரூ.1,57,808ஆக குறைந்தது. பின்னர் சற்று மீண்டு ரூ.1,69,600 அருகே வர்த்தகமானது. வெள்ளி விலையும் குறைந்தது.
சென்னை சந்தையில் தங்க விலை ஜனவரி 31, 2026 அன்று கணிசமாக குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.17,291 ஆக வர்த்தகமாகியது. நேற்றை விட ரூ.1,037 குறைந்துள்ளது. 10 கிராம் தங்கம் ரூ.1,72,910ஆகவும், 100 கிராம் ரூ.17,29,100ஆகவும் உள்ளது. இது சமீபத்தில் ஏற்பட்ட உயர்வுக்கு பிறகு ஏற்பட்ட சரிவாகும்.
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,850 ஆக குறைந்துள்ளது (நேற்றை விட ரூ.950 சரிவு). 10 கிராம் ரூ.1,58,500ஆகவும், 100 கிராம் ரூ.15,85,000ஆகவும் வர்த்தகமாகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.13,500 ஆக உள்ளது (ரூ.400 குறைவு). 10 கிராம் ரூ.1,35,000ஆகவும், 100 கிராம் ரூ.13,50,000ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.405 ஆக குறைந்துள்ளது (நேற்றை விட ரூ.20 சரிவு). 10 கிராம் ரூ.4,050ஆகவும், 1000 கிராம் ரூ.4,05,000ஆகவும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் விலை ஒரு கிராமுக்கு ரூ.7,393 ஆக உள்ளது (நேற்றை விட ரூ.657 குறைவு). 10 கிராம் ரூ.73,930ஆகவும், 100 கிராம் ரூ.7,39,300ஆகவும் உள்ளது.
இந்த சரிவு உலக சந்தையில் ஏற்பட்ட லாப பதிவு (profit booking) காரணமாக ஏற்பட்டது. சமீபத்தில் தங்கம் $5,600 அருகே உச்சத்தை எட்டியது. இப்போது விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால் தங்கம் நீண்டகால முதலீட்டுக்கு இன்னும் சிறந்த சொத்தாகவே உள்ளது. சாதாரண மக்கள் தங்கம் வாங்க திட்டமிடும்போது தினசரி விலை மாற்றங்களை கண்காணிப்பது நல்லது. திருமண சீசன் நெருங்கும் நிலையில் இந்த சரிவு பலருக்கு உதவியாக இருக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications