மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் தீவிரமாக இருக்கும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பு சொத்துகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதம் பெரும்பாலான நாட்களில் நிலையாக இருந்த தங்கம் - வெள்ளி விலை, இந்த போர் காரணமாக பல வார உச்சங்களை எட்டியது.
ஹார்முஸ் கப்பல் போக்குவரத்து பாதையை முழுமையாக மூடப்படும் என்ற ஈரானின் அச்சுறுத்தல் உலக அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சொத்துகளை நோக்கி திரும்பியுள்ளனர். ஆனால் இன்று திடீர் திருப்பமாக தங்கம், வெள்ளி மீதான முதலீட்டை குறைத்து கச்சா எண்ணெய் மற்றும் டாலரில் முதலீடு அதிகரித்தனர். ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் இது முதலீட்டு சந்தையில் திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் - வெள்ளி விலை ஏறியது ஏன்?
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், சர்வதேச முதலீட்டு சந்தையில் பாதுகாப்பான சொத்துக்களாக திகழும் தங்கம், வெள்ளி மீதான தேவை அதிகரித்தது. இதனால் தங்கம் (XAU/USD) மற்றும் வெள்ளி (XAG/USD) விலை பல வார உச்சங்களை எட்டியது.
கடந்த ஒரு வார வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 5415 டாலருக்கும், வெள்ளி விலை 96 டாலருக்கும் உயர்ந்தது. இந்த உயர்வு போர் காரணமாக முதலீட்டு சந்தையில் தேவை அதிகரித்து இந்த உலோகம் ப்ரீமியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதால் விலை உயர்ந்தது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
விலை சரிவு ஏற்படுமா?
இந்த நிலையில் போர் விரைவாக முடிவுக்கு வந்தாலோ அல்லது போரின் தீவிரம் குறைந்தாலோ, தங்கம் மற்றும் வெள்ளி விலை 3 - 8% சரியும் என்று சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். INVasset PMS நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் ஹர்ஷல் தசானி கூறுகையில், அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப்பட்டு உடன்பாடு ஏற்பட்டால், தங்கம் - வெள்ளி மீதான பாதுகாப்பு பிரீமியம் குறையும்.
இதனால் தங்கத்தின் விலை 3 - 5% சரிவும், வெள்ளியில் 5 - 8% வரை கடுமையான சரிவும் ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், போர் மட்டும் தங்கம் - வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் இல்லை என்று அவர் விளக்கினார்.
மற்ற முக்கிய காரணங்கள்
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் நாணய மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தங்கம் வாங்குவது, டாலரில் இருந்து மாற்று நாணயத்தை பயன்படுத்துவதற்கும், பெரிய பொருளாதாரங்களில் நிதி மேம்பாடு, தொடர்ந்து வரும் போர் பிரச்சனை ஆகியவை அடிப்படை காரணிகளாக உள்ளன.
இவை நீண்டகால அடிப்படையில் தங்கம் விலை உயர்வுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் போர் வெறும் குறுகிய கால தூண்டுதலாக மட்டுமே செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் என்ன நடக்கும்?
இந்த போர் தீவிரம் அடைந்தால் இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை ரூ.1,70,000 (10 கிராம்) வரை செல்லலாம் என்று அவர் கணித்துள்ளார். இதேபோல் வெள்ளி ரூ.3,00,000 (கிலோ) அளவை எட்டி இரண்டும் இந்த விலையில் நிலை நிறுத்தலாம்.
ஆனால் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான ஒப்பந்தம் எட்டப்பட்டால், தங்கம், வெள்ளி சந்தையில் அதிகளவில் விற்கப்பட்டு லாப எடுக்கப்படலாம். கடந்த சில நாட்களில் தங்கம் - வெள்ளி விலையில் 3-6% உயர்வு ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்களின் விற்பனை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் ஆதிக்கம்
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. டாலர் ஐந்து வார உச்சத்தில் இருந்து வருகிறது. இது பாதுகாப்பு சொத்துகளின் உயர்வை கட்டுப்படுத்துகிறது. ஆனால், போர் நீடித்தால் இந்த கட்டுப்பாடு குறையலாம்.
தங்கம் - வெள்ளி விலை உயர்வு தற்போது போர் காரணமாக ஏற்பட்டுள்ளது. ஆனால், போர் முடிவுக்கு வந்தாலோ அல்லது போரின் தீவிரம் குறைந்தாலோ, அல்லது இரு நாடுகள் மத்தியிலான ஒப்பந்தம் எட்டப்பட்டாலோ இதன் விலை 3 - 8% சரிவு ஏற்படலாம்.
இன்றைய சர்வதேச சந்தை விலை
சொல்லி வைத்தது போல் இன்று சர்வதேச வர்த்தக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 3.52 சதவீதம் குறைந்து 5,136.11 டாலர் அளவுக்கு குறைந்தது, வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் - க்கு 8.40 சதவீதம் சரிந்து 81.8 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது. இதனால் நாளை இந்திய சந்தையில் பெரும் சரிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?



Click it and Unblock the Notifications