தடாலடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி! ரூ.4.2 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சமாக சரிந்த வெள்ளி! என்ன காரணம்?

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதுவது தங்கத்தை தான். புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் தங்கத்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கி வந்தனர். அதற்கு ஏற்ப தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. ஆனால் இப்போது இந்த அதிகரிப்பில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கம் மட்டுமல்ல வெள்ளியும் கிராமுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தங்கம் அதன் உச்சபட்ச விலையில் இருந்து சுமார் 33 சதவீதமும், வெள்ளி 58 சதவீதமும் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தடாலடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி! ரூ.4.2 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சமாக சரிந்த வெள்ளி! என்ன காரணம்?

இந்தியாவில் நவம்பர் 19-ஆம் தேதி நிலவரப்படி 10 கிராம் தங்கம் 1,19,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் அதன் உச்ச விலையான ரூ. 1.8 லட்சத்திலிருந்து தற்போது ரூ.1,19,800-ஆகக் குறைந்திருக்கிறது. இது சுமார் 33.44 சதவீத சரிவைக் குறிக்கிறது. 10 கிராமுக்கு 60,200 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையை விட வெள்ளியின் விலை இன்னும் மோசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி நவம்பர் 19 நிலவரப்படி 1,80,000 ரூபாயாக இருக்கிறது. நவம்பர் 18ஆம் தேதியோடு ஒப்பிடுகையில் ரூ.5000 வரை விலை குறைந்துள்ளது. வெள்ளி அதன் உச்ச விலையான ரூ.4.2 லட்சத்திலிருந்து 1,80,000-ஆக 57.14 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது ரூ.2,40,000 வரை சரிந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவதற்கான முக்கிய காரணங்கள்: அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகமாகவே வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதெல்லாம் பணவீக்கம் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் ஃபெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைக்காமல் வைத்திருக்கும்.

வட்டி விகிதங்கள் உயரும்போது வட்டி வருமானம் தராத தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய மாட்டார்கள். வட்டி அதிகமாக இருக்கும் பிக்சட் டெபாசிட் மற்றும் பத்திரங்களின் பக்கம் திரும்புவார்கள். இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரியும்.

அதேபோல 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி டாலரில் தான் நிர்ணயிக்கப்படும். டாலரின் மதிப்பு அதிகம் ஆகும்போது பிற நாட்டு நாணயங்களை பயன்படுத்துபவர்களுக்கு டாலர் விலை உயர்ந்ததாக மாறும்.இதுவும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகிறது.

தங்கத்தைக் காட்டிலும் வெள்ளியின் விலை அதிகமாக குறைவதற்கு காரணம் எலக்ட்ரானிக், சோலார் பேனல்கள் மற்றும் உற்பத்தி துறையில் வெள்ளி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது சீன உற்பத்தி துறையில் வெள்ளியின் பயன்பாடு சற்று குறைந்து இருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் டாலரின் நகர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+