மக்கள் தங்கம் , வெள்ளி ஆகியவற்றை வாங்குவதை தடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திடீரென தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. ஓவர்நைட்டில் வெளியான இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தங்க சந்தையையும் புரட்டி போட்டு விட்டது.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் வெளிநாட்டு நாணய கையிருப்பை தக்க வைக்க மத்திய அரசு தங்கம் வாங்குவதை மக்கள் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி வரி உயர்வால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

சென்னையிலேயே இன்றைய தினம் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 15,400 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 8,560 ரூபாய் உயர்ந்து 1,23,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி 30 ரூபாய் விலை உயர்ந்து 330 ரூபாய்க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளி 30 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி வரி உயர்வு அறிவிக்கப்பட்டதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்தன. இதனால் கோல்டு ஈடிஎஃப் மற்றும் சில்வர் ஈடிஎஃப்களின் மதிப்புகளும் அதிகரித்துள்ளது. அதாவது கோல்டு ஈடிஎஃப் மற்றும் சில்வர் ஈடிஎஃப்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் செம லாபம் கிடைத்துள்ளது.
குறிப்பாக Quantum Gold Fund 15% லாபம் தந்தது, அதே வேளையில் Tata கோல்டு ஈடிஎஃப் 12% உயர்ந்தது. மொத்தமுள்ள 25 கோல்டு ஈடிஎஃப்களில் பெரும்பாலானாவை 8%க்கும் மேல் உயர்வு கண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்தன. அதே போல சில்வர் ஈடிஎஃப் திட்டங்களின் மதிப்புகளும் 10% வரை உயர்வு கண்டன.
தங்கத்தை நகையாக வாங்கும் போது செய்கூலி சேதாரமே பெரிய தொகையாக வரும், ஆனால் இது போன்ற ஈடிஎஃப் திட்டங்களில் 100 ரூபாய் முதலே முதலீடு செய்யலாம். ஈடிஎஃப்களின் சொத்து மதிப்பு தங்கம் மற்றும் வெள்ளி விலைகளுடன் நேரடியாக தொடர்புடையதால் இவற்றின் விலை ஏற ஏற ஈடிஎஃப்களின் மதிப்பும் அதிகரிக்கிறது.
இனிவரும் நாட்களிலும் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகள் ஏறி கொண்டு தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கம் விலை ஏறுகிறதே என கவலைப்படாமல் மக்கள் ஈடிஎஃப்களில் இப்போதே முதலீடு செய்து வைத்தால் அடுத்த சில மாதங்களில் நல்ல லாபம் பார்க்கலாம் என்கின்றனர்.
அதே போல நீண்ட கால அடிப்படையில் எஸ்ஐபி முறையில் ஈடிஎஃப் திட்டங்களில் பணத்தை போடலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை. அந்த வகையில் தங்கம் விலை ஏறுகிறதே நாம் தவறவிட்டு விட்டோமா என்ற அச்சம் தேவையில்லை என்கின்றனர். எனவே தங்கத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு கோல்டு ஈடிஎஃப், சில்வர் ஈடிஎஃப் திட்டங்கள் தற்போது நல்ல வாய்ப்பை தருகின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

