தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக பெரிய அதிரடி மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து நிலையாக இருந்து வருவது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று அமெரிக்க வர்த்தக சந்தை திறக்கும் போது தங்கம் மற்றும் வெள்ளி விலை தாறுமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் ஒரு டிராய் அவுன்ஸுக்கு 5,011.44 டாலர் வரையில் உயர்ந்தது, இது நேற்றைய வர்த்தகத்தில் பதிவான 4,841.74 டாலர் விலையில் இருந்து 2.8% உயர்வு. ஏப்ரல் மாதம் டெலிவரியாகும் தங்க ஃப்யூச்சர்ஸ் 2.2% உயர்ந்து 5,016 டாலராக உள்ளது.

வெள்ளி விலை எதிர்பார்க்காத வகையில் தங்கத்தை காட்டிலும் வேகமாக உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 6.7 சதவீதம் உயர்ந்து 78.33 டாலராக உயர்வை கண்டுள்ளது, முந்தைய நாள் 4% சரிவிலிருந்து மீண்டுள்ளது. இந்த உயர்வு ஜியோபாலிடிக்ஸ் அச்சங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஜனவரி கூட்ட குறிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்பால் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக புதன்கிழமை எம்சிஎஸ் சந்தை முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2.91 சதவீதம் உயர்ந்து 1,55,828 ரூபாயாக முடிந்தது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 7 சதவீதம் உயர்ந்து 2,44,622 ரூபாயாக உயர்ந்தது.
உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை:
அமெரிக்க தலைமையிவ் ஜெனிவாவில் நடந்த உக்ரைன்-ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த பேச்சுவார்த்தை "கடினமான பேச்சுவார்த்தை" என்று கூறியுள்ளார். ரஷ்யா பேச்சுவார்த்தையை திட்டமிட்ட தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய சர்வதேச அரசியல் பதற்றங்கள் தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பு சொத்துக்களுக்கான தேவையை அதிகரிக்கின்றன.
ஈரான் பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான அணு சக்தி பேச்சுவார்த்தையில், அமெரிக்க அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளை விவாதங்களை ஈரான் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்த ஒப்பந்தம் உடனடியாக நடக்காது. இது சந்தையில் நிச்சயமின்மையை உருவாக்கி தங்க விலையை உயர்த்தியுள்ளது.
சீனாவின் தங்க கொள்முதல்
சீன மத்திய வங்கி தங்க இருப்பை 15ஆவது மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சர்வதேச மத்திய வங்கிகளின் நீண்டகால திட்டத்தை காட்டுகிறது. இதேபோல் தங்கம் தொடர்ந்து வாங்கப்படுவதால் டாலருக்கான தேவை குறைந்து வருகிறது. இதோடு ஆசிய சந்தை முழுவதும் தங்க ETF முதலீடு வலுவாக உள்ளது, இதன் காரணமாகவும் தங்க விலையை ஆதரிக்கிறது.
தங்கம் விலை கடைசியாக ஜனவரி 29இல் 5,594.82 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது, பின்னர் கெவின் வார்ஷ் பெடரல் ரிசர்வ் தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தங்கம், வெள்ளி விலை சரிய துவங்கியுள்ளது.
பிப்ரவரி 18 - தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை
இன்று ரிடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,524ஆக உள்ளது, இது நேற்றை விட ரூ.98 ரூபாய் குறைவு. மேலும் 22 கேரட் தங்கம் விலை 1 கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ.14,230 ரூபாயாக உள்ளது. மேலும் 18 கேரட் தங்கம் விலை 1 கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 12,180 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாயாகவும், ஒரு கிலோ 5000 ரூபாய் குறைந்து 2,60,000 ரூபாயாகவும் உள்ளது. இதோடு இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகளவில் டிரெண்டாகும் பிளாட்டினம் விலை ஒரு கிராமுக்கு 79 ரூபாய் உயர்ந்து 5,942 ரூபாயாக உள்ளது, 10 கிராமுக்கு 790 ரூபாய் உயர்ந்து 59,420 ரூபாயாக பதிவாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications