தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம்? விலை தாறுமாறாக உயரும் நிலையில் மத்திய அரசு வியூகம்?

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,000 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1.20 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 13% தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம் போடும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என மணி கண்ட்ரோல் தளம் பிரத்தியேக செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு கடிவாளம்? விலை தாறுமாறாக உயரும் நிலையில் மத்திய அரசு வியூகம்?

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் விவாதித்து வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. வரி குறைப்பின் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு எப்போதும் மிகப்பெரிய பங்கு உண்டு. விசேஷங்களுக்காக தங்கம் வாங்குவது நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் ஒரு நாடும் இந்தியா தான். இந்நிலையில் தான் ஈரான் போர் காரணமாக அந்நிய செலாவணி குறைந்ததால் மத்திய அரசு கடந்த மே மாதம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. மே மாதத்தில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%ஆக உயர்த்தப்பட்டது.

Also Read

போர் சூழல் சீரடைந்துவிட்டதால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மக்களும் ந்கை வியாபாரிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மீண்டும் 6% என்ற அளவிலேயே கொண்டு வர வேண்டும் என கேட்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி அதிகமாக இருக்கும் போது, சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் சட்டவிரோத கடத்தல்களை தடுத்து, வெளிப்படையான மற்றும் முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

தற்போது தங்கம் விலை உயர்ந்திருப்பதால் இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே வரியை குறைத்தால் நுகர்வோருக்கு விலை குறையும் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றாலும், மறுபுறம் தங்கம் இறக்குமதி அதிகரிப்பது நாட்டின் வெளிநாட்டுப் பண இருப்பை குறைக்க வழிவகுக்கும். எனவே, இந்த இரு சவால்களை சமன் செய்யும் வகையிலும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீராக பராமரிக்கும் வகையிலும் அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+