கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கடந்த சில மாதங்களாக விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது திடீரென சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையேயும் முதலீட்டாளர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் விலை குறைந்துள்ளது என்பது இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும், மறுபுறம் இது இன்னும் குறையுமா அல்லது இப்போதே வாங்கி விடலாமா? என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் மற்றும் உலகளாவிய அரசியல் சூழல்கள் இந்த திடீர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக வெள்ளி 20% வரை சரிந்திருப்பது சிறு முதலீட்டாளர்களை கவலை அடைய செய்தாலும், நீண்ட கால நோக்கில் இது ஒரு அரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த சரிவு ஒரு தற்காலிகமான சரிவுதானா? சந்தை நிபுணர்கள் இப்போது என்ன செய்ய சொல்கிறார்கள்? இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிலான பதற்றமானது நீடித்து வருகிறது. ஆனாலும் தங்கம் விலையானது வலுவாக குறைந்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது. இதே வெள்ளி விலையும் ஒரு மாத குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழலிலும் டாலர் மதிப்பானது வலுவாக காணப்படுகிறது. இது தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

தொடர்ந்து ஈரான் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இது பணவீக்க அச்சத்தை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்கள், விலை எப்போது உச்சத்தை எட்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 29, 2026 அன்று தங்கம் விலையானது பியூச்சர் சந்தையில் 10 கிராமுக்கு 1.92 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை குறைந்து 1.39 லட்சம் ரூபாய் என்ற நிலையை எட்டியது. அதன் பிறகு மீண்டும் பெரிய அளவிலான ஏற்றத்தை காணவில்லை. இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமையன்று 1.44 லட்சம் ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இதன் மூலம் கடந்த 21 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் 11% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

Also Read

இதே வெள்ளி விலையும் கடந்த சில தினங்களாக சரிவில் காணப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் 160% அளவுக்கு ஏற்றம் கண்ட வெள்ளியானது, எம்சிஎக்ஸ் பியூச்சர் சந்தையில் ஒரு கிலோவுக்கு 2.82 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை எட்டிய நிலையில், இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 2.27 லட்சம் ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இது சுமார் 20% சரிவாகும், இது வெறும் 21 நாட்களில் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து டாலர் மதிப்பானது அதிகரித்து வருவது மற்ற கரன்சிகளில் தங்கம் வாங்குவோருக்கு, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளியுள்ளது. அதே நேரம் கச்சா எண்ணெய் விலையானது உயர்ந்து வருவது, பணவீக்கத்தை உயர்த்தலாம். இது மத்திய வங்கிகளின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம்.

மாறாக வட்டி விகிதத்தை உயர்த்தலாம் அல்லது உச்சத்திலேயே வைத்திருக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் இருந்து முதலீடுகள் வெளியேறி, வட்டி தரும் முதலீடுகளில் முதலீடுகள் அதிகரிக்கலாம். இது தங்கம் மற்றும் வெள்ளியின் முதலீட்டு தேவையை குறைக்கலாம்.

நிபுணர்கள் தற்போதைய சூழலில் தங்கம் மற்றும் வெள்ளியில் வர்த்தகம் செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையுடனும், கட்டுப்பாடுடனும் செயல்படுவது மிக அவசியம் என்று கருதுகின்றனர். நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்பினால், வெள்ளியை விட தங்கத்தில் அதிக முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது. தங்கத்தில் 70 - 75% வரியையும், வெள்ளியில் 30% - 35% வரையில் பங்கிட்டு முதலீடு செய்வது சிறந்த லாபத்தையும், பாதுகாப்பையும் தரும் அறிவுறுத்தப்படுகிறது. இது நீண்ட கால அடிப்படையில் லாபகரமான ஒன்றாக அமையலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+