உலக அளவில் நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த நான்கு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதற்குப் பின்னால் இருப்பவர் ஒருவர் தான். இந்த ஒரு நபரின் பெயரை அறிவித்த உடனே தங்கம், வெள்ளி சந்தையே ஆடிப் போய் நிற்கிறது.
பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல என ரஜினிகாந்த் சொல்வதைப் போல இவர் பெயரைக் கேட்ட உடனேயே உலக சந்தைகளை அதிர்ந்து போய் நிற்கின்றன. கடந்த ஓராண்டு காலமாகவே உலக அளவில் நிகழக்கூடிய அனைத்து விதமான பொருளாதாரம் மாற்றங்களுக்கும் அமெரிக்கா தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலை, அமெரிக்க மத்திய வட்டி வட்டியை குறைப்பது. அமெரிக்க அதிபஎ டிரம்ப் பல்வேறு நாடுகளின் மீது தொடுக்கும் வர்த்தக மோதல் மற்றும் அமெரிக்க அதிபர் உருவாக்கக்கூடிய புவிசார் பதற்றங்கள் என சொல்லி கொண்டே போகலாம்.

தங்கம், வெள்ளி விலையை உயர்த்துவதற்கு பின்னணி காரணமாக இருந்த அனைத்தையுமே தொடங்கி வைத்தது அமெரிக்கா தான். தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொடுவதற்கு அமெரிக்கா காரணமாக இருந்ததோ தற்போது அமெரிக்காவே தான் தங்கம், வெள்ளி விலை குறைவதற்கும் காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்த ஒரு நபரின் பெயரை கேட்டவுடன் நான் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் இருந்த பணத்தை எல்லாம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம். வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது.
தொடர்ந்து உச்சத்தில் வந்து நாளுக்கு நாள் மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை குறைவதற்கு இந்த நபர் தான் காரணம். அவர் யார் என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம். அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக தற்போது ஜெரோமி பாவெல் இருக்கிறார். இவருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் ஏழாம் பொருத்தம் என கூறலாம். அந்த அளவிற்கு இருவருமே எப்போதுமே மோதல் போக்கிலேயே இருக்கின்றனர். வரும் மே மாதம் அவரது பதவிக்காலம் முடிகிறது.
எனவே அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ட்ரம்பிடம் வந்தது. இந்த பதவிக்கு கெவின் வார்ஷ் என்பவரை தான் பரிந்துரை செய்வதாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னர் தான் உலக சந்தையே ஆடிப்போனது. கடந்த 29ஆம் தேதி தான் உலகளவில் தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. அன்று இரவு தான் டிரம்ப் கெவின் வார்ஷை அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பதவிக்கு நான் பரிந்துரை செய்கிறேன் என டிரம்ப் அறிவித்தார். அடுத்த நாளே தங்கம், வெள்ளி விலை சரிய தொடங்கியது.

கெவின் வார்ஷ் இதற்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தவர் தான். இவர் பணவீக்கம் உயர்வு , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார். அதேபோல அமெரிக்க டாலரை வலுப்படுத்துவதில் தீவிரமாக இருப்பவர். இதற்காக அவர் கடுமையான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அவர் மேற்கொண்டு வட்டி குறைப்பு நடவடிக்கை எதையும் எடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. வேண்டுமானால் அவர் வட்டியை கூட உயர்த்துவார் என சொல்லப்படுகிறது. எனவே அமெரிக்க பத்திரங்களில் வட்டி வருமானம் இனி அதிகமாக கிடைக்கும், டாலரின் மதிப்பும் உயரும் என்பதால் தான் முதலீட்டாளர்கள் இவர் வந்து தங்கம், வெள்ளி விலை சரிந்து நஷ்டமாவதற்கு முன்பு கிடைத்த லாபத்தில் பணத்தை எடுக்கலாம் என முதலீடுகளை திரும்ப பெற்றனர்.
ஒரே நாளில் பலரும் தங்கம், வெள்ளியில் செய்த முதலீட்டை திரும்ப பெற்றதால் தான் வேகமாக இவற்றின் விலை சரிந்துள்ளது. இதுதான் உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைவதற்கு முக்கிய காரணம். இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து தங்கம், வெள்ளியின் விலை இறங்குமுகமாக இருப்பதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது. ஏனெனில் கெவின் வார்ஷின் வருகை மட்டுமல்ல புவிசார் பதற்றங்கள் தனிந்துள்ளன, வர்த்தக மோதல்கள் பெரிதாக இல்லை இதுவும் தங்கம், வெள்ளி விலை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications