தங்கம் விலையில் எப்போதும் இல்லாமல் அதிகப்படியான தடுமாற்றம் அடைந்து வருகிறது, ஒருபக்கம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை இந்த வருடத்தின் இறுதிக்குள் 2 அல்லது அதற்கு மேல் குறைக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. பொதுவாக வட்டி குறைக்கப்பட்டால் தங்கம் விலை உயர வேண்டும், ஆனால் தற்போது மாறுபட்டுச் செயல்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க டாலர் மதிப்பு 4 மாத சரிவில் இருந்து மிகவும் வலிமையாக உயர்ந்து வருவதால், தங்கத்தை விட்டு மக்கள் டாலர் மீது முதலீடு செய்து இதில் பெரும் லாபத்தை பார்க்க முடிவு செய்துள்ளனர்.
இதேவேளையில் தங்கம் விலை புதன்கிழமை வரலாற்று உச்சத்தைத் தொட்ட நிலையில், இந்த உயர்வான விலையை லாபகரமானதாக மாற்றும் முயற்சியில் தங்கம் மீதான முதலீட்டை சில முதலீட்டாளர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

டாலர் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டுக்கு மத்தியில் தங்கம் தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. இதனால் தங்கத்தை நீண்ட கால சேமிப்புக்காக வாங்கத் திட்டமிடுவோர் விலை சரியும் போது வாங்கி பயனடையலாம்.
இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2472 டாலரில் இருந்து 2416 டாலர் வரையில் குறைந்துள்ளது. கடந்த 15 மணிநேரத்தில் தங்கம் விலை 60 டாலர் வரையில் குறைந்துள்ளது.
இன்றைய MCX சந்தை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து, தங்கம் வாங்குவோரை மனம் குளிர வைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முடிவடையும் தங்கம் பியூச்சர் ஆர்டரின் மதிப்பு 1.05 சதவீதம் சரிந்து 73,375 ரூபாயாக உள்ளது, இதேபோல் செப்டம்பர் மாதம் முடிவடையும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1.83 சதவீதம் சரிந்து 90.094.00 ரூபாயாக உள்ளது.
இதன் எதிரொலியாக ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 68,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் குறைந்து 75,000 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 55000 ரூபாயாக உள்ளது. இதுவே வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1.45 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 1450 ரூபாயும் குறைந்து 97,750 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 830 ரூபாய் குறைந்து 25,940 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,875 ரூபாய், மும்பை - 6,815 ரூபாய், டெல்லி - 6,830 ரூபாய், கொல்கத்தா - 6,815 ரூபாய், பெங்களூர் - 6,815 ரூபாய், ஹைதராபாத் - 6,815 ரூபாய், கேரளா - 6,815 ரூபாய், புனே - 6,815 ரூபாய், பரோடா - 6,820 ரூபாய், அகமதாபாத் - 6,820 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,830 ரூபாய், லக்னோ - 6,830 ரூபாய், கோயம்புத்தூர் - 6,875 ரூபாய், மதுரை - 6,875 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,500 ரூபாய், மும்பை - 7,435 ரூபாய், டெல்லி - 7,450 ரூபாய், கொல்கத்தா - 7,435 ரூபாய், பெங்களூர் - 7,435 ரூபாய், ஹைதராபாத் - 7,435 ரூபாய், கேரளா - 7,435 ரூபாய், புனே - 7,435 ரூபாய், பரோடா - 7,440 ரூபாய், அகமதாபாத் - 7,440 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,450 ரூபாய், லக்னோ - 7,450 ரூபாய், கோயம்புத்தூர் - 7,500 ரூபாய், மதுரை - 7,500 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55000 ரூபாய், மும்பை - 54520 ரூபாய், டெல்லி - 54640 ரூபாய், கொல்கத்தா - 54520 ரூபாய், பெங்களூர் - 54520 ரூபாய், ஹைதராபாத் - 54520 ரூபாய், கேரளா - 54520 ரூபாய், புனே - 54520 ரூபாய், பரோடா - 54560 ரூபாய், அகமதாபாத் - 54560 ரூபாய், ஜெய்ப்பூர் - 54640 ரூபாய், லக்னோ - 54640 ரூபாய், கோயம்புத்தூர் - 55000 ரூபாய், மதுரை - 55000 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,940 ரூபாய், மும்பை - 25,940 ரூபாய், டெல்லி - 25,940 ரூபாய், கொல்கத்தா - 25,940 ரூபாய், பெங்களூர் - 25,940 ரூபாய், ஹைதராபாத் - 25,940 ரூபாய், கேரளா - 25,940 ரூபாய், அகமதாபாத் - 25,940 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,940 ரூபாய், லக்னோ - 25,940 ரூபாய், கோயம்புத்தூர் - 25,940 ரூபாய், மதுரை - 25,940 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 97,750 ரூபாய், மும்பை - 93,250 ரூபாய், டெல்லி - 93,250 ரூபாய், கொல்கத்தா - 93,250 ரூபாய், பெங்களூர் - 94,400 ரூபாய், ஹைதராபாத் - 97,750 ரூபாய், கேரளா - 97,750 ரூபாய், புனே - 93,250 ரூபாய், பரோடா - 93,250 ரூபாய், அகமதாபாத் - 93,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 93,250 ரூபாய், லக்னோ - 93,250 ரூபாய், கோயம்புத்தூர் - 97,750 ரூபாய், மதுரை - 97,750 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,343 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,010 ரூபாய்
மலேசியா - MYR 359 - 6,419 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,363 ரூபாய்
கத்தார் - QAR 276 - 6,340 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 283 - 6,308 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 103 - 6,396 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 272 - 6,186 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,271 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 272 - 6,186 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 272 - 6,186 ரூபாய்
துபாய் (UAE) - AED 272 - 6,186 ரூபாய்
புஜைரா (UAE) - AED 272 - 6,186 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 272 - 6,186 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 272 - 6,186 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 276 - 6,340 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,363 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 283 - 6,308 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,743 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,672 ரூபாய்
மலேசியா - MYR 375 - 6,705 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,700 ரூபாய்
கத்தார் - QAR 300 - 6,879 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 305 - 6,799 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 113 - 7,055 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 294 - 6,682 ரூபாய்
அமெரிக்கா - USD 80 - 6,647 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 294 - 6,682 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 294 - 6,682 ரூபாய்
துபாய் (UAE) - AED 294 - 6,682 ரூபாய்
புஜைரா (UAE) - AED 294 - 6,682 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 294 - 6,682 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 294 - 6,682 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 300 - 6,879 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,700 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 305 - 6,799 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications