தங்கம், வெள்ளி விலையில் நிலவிய மந்த நிலை முடிந்தது, ஒருப்பக்கம் ஈரான் மீது அமெரிக்காவின் போர் தொடுக்க தாயாராகும் பணிகளும், சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் நீண்ட விடுமுறைக்கு பின்பு வர்த்தக சந்தைக்கு வரும் காரணத்தால் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட முக்கியமாக ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

தங்கம் விலை (பிப்.19)
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 15,818 ரூபாயாக உள்ளது, இது நேற்றை விட ₹294 உயர்வு. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு 270 ரூபாய் உயர்ந்து ரூ.14,500 விலைக்கு வர்த்தகமாகிறது. இதேபோல் 18 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,400 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை (பிப்.19)
தங்கத்தை போலவே இன்று வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து மந்த நிலையிலேயே இருந்து வெள்ளி முதலீட்டாளர்களுக்கு இன்றைய விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 270 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 10000 ரூபாய் உயர்ந்து 2,70,000 ரூபாயாக உள்ளது. இதோடு பிளாட்டினம் விலை ஒரு கிராமுக்கு 149 ரூபாய் உயர்ந்து 6,091 ரூபாயாக உள்ளது. 10 கிராம் பிளாட்டினம் விலை 1490 ரூபாய் உயர்ந்து 60,910 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
சர்வதேச சந்தை விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று மாலை வர்த்தகத்தில் 5,011.44 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் வியாழக்கிழமை ஆசிய வர்த்தக நேரத்தில் 4,985 டாலர் அருகே நிலைத்து நிற்கிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்ததால் பாதுகாப்பு சொத்தான தங்கத்திற்கான தேவை மீண்டும் உயர்ந்துள்ளது. ஆனால் தங்கம் முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களாக விலை உயராமல் மந்தமாக இருந்த காரணத்தால் லாப நோக்கிற்காக அதிகளவில் விற்பனை செய்ததன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று பதிவான 5000 டாலர் அளவில் இருந்து கீழே சரிந்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் வெறும் 87 சென்ட் உயர்ந்து 4977.77 டாலராக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 54 சென்ட் உயர்ந்து 77.7 டாலராக உள்ளது.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் புதன்கிழமை பேசுகையில், ஈரான் முக்கிய கோரிக்கைகளை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார். வாஷிங்டன் ஈரானுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது என CNBC தெரிவித்துள்ளது. டிரம்ப் 2018ல் ஈரான் உடன் செய்யப்பட்ட அணு ஒப்பந்தத்தை (JCPOA) ரத்து செய்ததால் உருவான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணு திட்டத்தை தடுக்க பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். இதேவேளையில் ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல் மற்றும் போர் விமானங்களை அதிகரித்துள்ளது. இத்தகைய சர்வதேச அச்சங்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றுகின்றன. இதனால் தங்கம் விலை உயர்வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. சந்தை ஆய்வாளர்கள் இது தங்க விலைக்கு மேலும் உயர்வை தரலாம் என்று கூறுகின்றனர்.
பெடரல் ரிசர்வ் கூட்டம்:
ஜனவரி மாத பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கலாம் என்று கூறுகின்றனர். மற்றவர்கள் விலை அழுத்தம் தொடர்ந்தால் கொள்கையை இறுக்கமாக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இதனால் CME FedWatch கருவியின்படி, இந்த ஆண்டு மூன்று முறை 25 அடிப்படை புள்ளி வட்டி குறைப்பை எதிர்பார்க்கிறது. முன்பு 2 முறை மட்டுமே வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 முறை வட்டி குறைப்பு என்பது ஜாக்பாட் போன்றது, இதனால் தங்கம் விலை உயர்வுக்கு மிகவும் சாதகமான நிலை உருவாகியுள்ளது, ஏனெனில் குறைந்த வட்டி சூழலில் தங்கம் முக்கிய முதலீடாக மாறும்.
பெடரல் ரிசர்வ் தலைவராக கெவின் வார்ஷ் வருவதற்கு முன்பாகவே பெட் நாணய குழுவில் பிளவு ஏற்பட்டு உள்ளது பொருளாதார வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதனால் கெவின் வார்ஷ் வருகை முதலீட்டு சந்தைக்கு கொண்டாட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா விடுமுறை தாக்கம்
சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் லூனார் நியூ ஈயர் விடுமுறை காரணமாக தங்கம், வெள்ளி வர்த்தகம் மந்தமாக உள்ளது. இந்த விடுமுறை காரணமாக முதலீட்டு சந்தையில் குறுகியகால தேவை குறைத்துள்ளது. இருப்பினும், சீன மத்திய வங்கி தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருவது நீண்டகால முதலீட்டை ஆதரிக்கும் வகையில் உள்ளது. ஆசியா முழுவதும் ETF முதலீடு வலுவாக உள்ளது.
மொத்தத்தில், தங்க விலை புவிசார் அரசியல் மற்றும் பெடரல் ரிசர்வ் எதிர்பார்ப்பால் உயர்ந்து வருகிறது. ஈரான் பதற்றம், டிரம்ப் அச்சுறுத்தல், சீனா வாங்கல் ஆகியவை மேலும் உயர்வுக்கு வழிவகுக்கலாம். முதலீட்டாளர்கள் சர்வதேச நிகழ்வுகளை கண்காணித்து முடிவெடுக்க வேண்டும். இன்று வெளியாகும் அமெரிக்க வேலைவாய்ப்பு தரவு மற்றும் வீடு விற்பனை அறிக்கை மேலும் தெளிவு அளிக்கும்.
More From GoodReturns

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications