அமெரிக்க வரி முடிவுகளால் உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் ஈரான்-அமெரிக்கா இடையேயான அரசியல் பதற்றம் ஆகியவை தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது. ஷாங்காய் வெள்ளி சந்தையில் வெள்ளி விலை காமெக்ஸ் விலையை காட்டிலும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நேற்று உயர்வை பதிவு செய்தாலும், இன்று சரிவை பதிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 5,183.51 அமெரிக்க டாலராக உள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ்-க்கு 44.24 டாலர் குறைந்து 0.85% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேபோல் சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு 87.2455 டாலராக உள்ளது. இது 0.9495 டாலர் சரிந்து 1.08% குறைவை பதிவாகியுள்ளது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையிலும் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் ஏப்ரல் 2026 முடியும் பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் தங்கம் விலை 0.31% சரிந்து ரூ.1,61,100-க்கு வர்த்தகமாகி வருகிறது. அதேநேரம், மார்ச் 2026 முடியும் வெள்ளி ஒப்பந்த விலை 2,66,120 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இது நேற்றைய விலையை காட்டிலும் 0.30% அதிகமாகும்.
டிரம்ப் வரி முடிவுகள்
அமெரிக்க உச்சநீதிமன்றம் டொனால்ட் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி திட்டத்தை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை டிரம்ப் மற்றொரு சட்டத்தின் கீழ் புதிதாக 15% இறக்குமதி வரியை உடனடியாக அமல்படுத்துவதாக அறிவித்தார். ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் கூறியதாவது, கூடுதல் வரிகள் விரைவில் வரும் என்று எச்சரித்தார். இந்த திடீர் முடிவுகள் உலக வர்த்தகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் பாதுகாப்பான முதலீட்டை தேடி ஓடி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளது. ஆனால் இன்று தங்கம் விலை சரிவுத்து பல முக்கிய காரணங்கள் உள்ளது, ஒருப்பக்கம் அமெரிக்க சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் ஓரே வரி, இது வர்த்தக சந்தையில் லெவல் பிளே உருவாக்கியுள்ளது.
ஷாங்காய் வெள்ளி சந்தை
சீன புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு ஷாங்காய் வெள்ளி சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விநியோக பற்றாக்குறை மற்றும் தொழில்துறை தேவை காரணமாக ஷாங்காய் வெள்ளி விலை COMEX வெள்ளி விலையை விட 7 டாலர் அதிகமாக ஒரு அவுன்ஸ்-க்கு 94.38 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இது உலக வெள்ளி சந்தையில் உள்ள உயர் விலை வித்தியாசத்தை காட்டுகிறது.
அமெரிக்கா-ஈரான் பதற்றம்
அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் தங்க விலை உயர்வுக்கு மற்றொரு காரணம். ஈரான் தனது யுரேனியம் இருப்பை குறைக்கும் திட்டத்தை அமெரிக்காவுக்கு முன்மொழிந்துள்ளது. இது அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை காட்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 26 அன்று ஜெனீவாவில் நடைபெறும்.
பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் ஏதேனும் பதற்றம் அதிகரித்தால், தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பு சொத்துகளின் தேவை உயரும்.
அமெரிக்க வரி முடிவுகள், ஈரான் பேச்சுவார்த்தை போன்றவை தங்க விலையை தொடர்ந்து உயர்த்தலாம். உலக பொருளாதார குழப்பங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருப்பதால், வியாபாரிகள் அடுத்த சில நாட்களை உன்னிப்பாக கண்காணிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications