வழக்கமாக இரு நாடுகளுக்கு மத்தியில் போர் நடைபெறுகிறது என்றால் உடனடியாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கிவிடும். ஆனால் ஈரான் போர் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டது. ஈரான் போர் தொடங்கியவுடன் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பல மடங்கு உயர போகிறது என்றுதான் பலரும் எண்ணினார்கள் ஆனால் அது அப்படியே நேர்மாறாக நடந்தது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் சப்ளை வெகுவாக பாதிக்கப்பட்டது. எனவே உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலைகள் உயர்ந்துவிட்டன அமெரிக்க டாலர் வலுவடைந்தது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறைந்தன. மார்ச் முழுவதுமே தங்கம் , வெள்ளி விலை சரிவிலே தான் இருந்து வந்தது.

போர் தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தைகள் குறித்த சிக்னல்கள் வெளிவந்ததால் தற்போது சற்றே விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே எப்போது நடக்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் என இருதரப்புமே தங்களுடைய நிலைப்பாடுகளில் உறுதியுடன் இருக்கின்றன. தங்களுடைய ஒரு நிபந்தனையை கூட விட்டுக் கொடுக்க இரு நாடுகளும் தயாராக இல்லை. இதுதான் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைய முக்கிய காரணம்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் எதை நோக்கி செல்லும் என்பதை நம்மால் கூற முடியாது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிடப்போகிறது இந்த வழித்தடம் மூலம் எந்த ஒரு கப்பலும் பயணம் செய்ய முடியாது என பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது உலக அளவில் மீண்டும் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு தடை அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தி இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் தங்கத்தின் விலை சரிவடைய தொடங்கி இருக்கிறது. உலக சந்தையில் ஈரான் போர் தொடங்கியது முதல் தங்கம் விலை 8% வெள்ளியின் விலை 16 சதவீதமும் சரிவடைந்து இருக்கிறது. கோமெக்ஸ் வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4800 டாலர்களாகவும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 77 டாலர்களாகவும் வர்த்தகமாகின்றன.
போர் தொடங்கிய உடனே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர்களை கடந்தது இந்த சூழலில் ஈரானும் அமெரிக்காவும் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிவை கண்டது. தற்போது ஈரான் போர் செல்லும் போக்கு தான் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலைகளை தீர்மானிக்க போகிறது.
போர் தீவிரமடைந்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலர்கள் வரை செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கோட்டக் செக்யூரிட்டி கமாடிட்டி பிரிவு ஆய்வாளர் செயின்வாலா தெரிவிக்கிறார். அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை கையகப்படுத்துகிறது கப்பல்களை அனுமதிக்காமல் நிறுத்துகிறது என்றால் கட்டாயம் எண்ணெய் விலை 120 டாலர்களை எட்டும் எனக் கூறுகிறார். கச்சா எண்ணெய் விலை 120 டாலர் என்ற மதிப்பை எட்டும் போது தங்கம், வெள்ளி விலைகள் சரிவடையும் எனக் கூறுகிறார்.
அதாவது 10% வரை தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4400 டாலர்களாகவும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 67 டாலர்களாகவும் சரிவடையும் என கூறுகிறார். உலக சந்தையில் தங்கம் விலை குறைகிறது என்றால் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் சரி சில்லறை விற்பனையிலும் சரி தங்கம், வெள்ளி விலைகள் குறையும்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,13,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது இதில் 10 சதவீதம் சரிவடைகிறது என்றால் 1,02,000 ரூபாய் என்ற அளவுக்கு தங்கம் விலை குறையும். வெள்ளி விலை இன்று ஒரு கிலோ 2,65,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 10% என்றால் 2,45,000 ரூபாய் வரை விலை சரிய வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் தான் இது நடக்கும், ஒரு வேலை இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டு விட்டால் தங்கம் , வெள்ளி விலை உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications

