அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

உலகளாவிய பொருளாதார பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று தடாலடியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து 11000 ரூபாய் வரையில் சரியும் என பல்வேறு கணிப்புகள் வெளியான நிலையில் சொல்லி வைத்தார் போல இன்று தங்கம், வெள்ளி விலை பெரிய அளவில் சரிந்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடைந்ததன் மூலம், உலகமும் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வட்டி விகித உயர்த்தும் போக்கு அதிகரிக்கும் என்ற அச்சங்கள் உருவாகியுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி தனது மதிப்பை தொடர்ந்து இழந்து வருகிறது.

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

ரீடைல் சந்தை விலை
இன்று தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது, 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.14,128 ஆக உள்ளது - நேற்றைவிட ரூ.730 குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.12,950-ஆகவும் (ரூ.670 குறைவு), 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10,800-ஆகவும் (ரூ.560 குறைவு) ரீடைல் சந்தையில் வர்த்தகமாகிறது. இதன் மூலம் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7300 ரூபாய் குறைந்துள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் பெரிய அளவில் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-ஆகவும் (ரூ.15 குறைவு), ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-ஆகவும் (ரூ.15,000 குறைவு) உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை மாற்றம் இல்லாமல் நிலையாக உள்ளது. ஒரு கிராம் பிளாட்டினம் ரூ.5,794-ஆகவும், 10 கிராம் ரூ.57,940-ஆகவும் வர்த்தகமாகிறது.

எம்சிஎக்ஸ் சந்தை
இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் தங்கம் சுமார் 5.59% சரிவுடன் ரூ.1,36,403 என்ற குறைந்த அளவில் வர்த்தகமாகி வருகிறது, இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே 3 சதவீத சரிவை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வருடம் இல்லாத வகையில் 11 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதன் மூலம் தங்கம் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இது ஒரே நாளில் ரூ.8,089 குறைந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. மே மாத பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களுக்கான வெள்ளி விலை 4% சரிவுடன் தொடங்கி ரூ.2,13,166 என்ற குறைவான அளவை காலை வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தை
இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணமாக சர்வதேச புலியன் சந்தையின் பதிவான சரிவு. சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை 2.5% குறைந்து, ஒரு அவுன்ஸுக்கு $4,372.86 என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இது தொடர்ந்து ஒன்பதாவது நாளாகும் வீழ்ச்சியாகும். மேலும், அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் விலை 4.4% குறைந்து $4,375.60 ஆக வீழ்ந்துள்ளது. வெள்ளி விலையும் 3.2% குறைந்து $65.61 அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு அச்சம்
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்ததால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கைகளை மாற்றங்களை நம்பி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

பணிவீக்கம் அதிகரிக்கும் நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு குறைந்து, அதற்கு பதிலாக உயர்த்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இது தங்கம் விலைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் CME Fed Watch Tool தரவுகளின்படி, 2026 ஜூன் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள பெட் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்வு நடைபெறும் சாத்தியம் வெறும் 22% ஆக உள்ளது. கடந்த வாரத்தில் இது 15% மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களுக்கு என்ன சிக்னல்?
பொதுவாக போர் பதற்ற காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு அச்சங்கள் காரணமாக தங்கத்திற்கு எதிரான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+