சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஒரே நாளில் பெரிய அளவில் சரிவடைந்து மக்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளன. ஜூன் மாத தொடக்கமே தங்கம் மற்றும் வெள்ளி நகை பிரியர்களுக்கு அட்டகாசமான தொடக்கமாக அமைந்திருக்கிறது.
ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சரிவடைந்து வருகின்றன. ஜூன் 1ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து 14, 500 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே ஜூன் 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்களிலும் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஜூன் 4ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 14,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 5-ம் தேதியன்று ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிவடைந்து 14,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், வாரத்தின் இறுதி நாளான இன்று கிராமுக்கு 230 ரூபாய் என தடாலடியாக விலை சரிவடைந்து இருக்கிறது. சென்னையில் நேற்றைய தினம் ஒப்பிடும்போது இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 1,840 ரூபாய் விலை சரிவடைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாயும் சவரனுக்கு 1840 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரையிலான ஆறு வர்த்தக நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 430 ரூபாயும் ஒரு சவரனுக்கு 3,440 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 305 ரூபாய் விலை குறைந்து 15,491 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,910 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரை 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 469 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. 10 கிராமுக்கு 4,960 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. 18 கேரட் தங்கமும் இன்று விலை குறைந்து ஒரு கிராம் 11,910 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளியின் விலை பொருத்தவரை கிராமுக்கு இன்று பத்து ரூபாய் விலை குறைந்து 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதியில் இருந்து பார்க்கும்போது வெள்ளியின் விலை கிராமுக்கு 20 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 20,000 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

