ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று திடீரென பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தின. இதனால் பல பொருட்களின் விலை உயர போகிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் இரண்டு நாட்களாக தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்தன. இந்நிலையில் இன்று தங்கம் விலை என்ன ஆனது என தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14950 ரூபாக்கு விற்கப்படுகிறது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் என பார்க்கும் போது நேற்று காலை ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,20,400 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே தற்போது சவரனுக்கு 800 ரூபாய் விலை சரிந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் மாற்றம் அடைந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று காலை 315 ரூபாய்க்கு விற்பனையானது, அதுவே இன்று 10 ரூபாய் விலை சரிந்து 305 ரூபாயிக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 3.05 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,950 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,19,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,309 ரூபாய்க்கும், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,470 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் 2 நாட்கள் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

