இந்திய மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக மிக முக்கியமான முதலீடாக இருந்த தங்கம், வெள்ளி விலை தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாள் வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
இதனால் மக்கள் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது வேண்டுமா..? என்ற முக்கியமான கேள்விக்குள் மூழ்கியுள்ளனர். இதேபோல் தங்கத்தை வாங்கி வைத்துள்ளவர்கள் எப்போது விற்கலாம்..? தங்கம் விலை எந்த அளவுக்கு குறையும் என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் LKP சீக்யூரிட்டீஸ் நிபுணர் ஜதீன் திரிவேதி முதலீட்டாளர்களும், தங்கத்தை விற்று பணமாக்க நினைக்கும் மக்களுக்கும் முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு தற்போது தெரிய வேண்டிய முக்கிமான விஷயம் தங்கம் விலை எந்த அளவுக்கு இருக்கும் என்பது தான்.
இதற்கான பதில் அளிக்கும் வகையில் ஜதீன் திரிவேதி விளக்கம் அமைந்துள்ளது தங்க விலை அமெரிக்கா-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை, சீனா வர்த்தக ஒப்பந்தத்தில் உருவாகியிருக்கும் நம்பிக்கை ஆகியவற்றால் தங்கம் விலை தமாற்றம் அடைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 வர்த்தக நாளில் 3.40 சதவீதம் சரிந்து 1,22,000 ரூபாய்களை தொட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க பணவீக்க தரவுகள் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் இந்த வாரம் தங்கம் விலை 1,18,000 முதல் 1,25,500 ரூபாய்கள் வரை ஏற்ற இறக்கம் நீடிக்கும் என்று ஜதீன் திரிவேதி கூறியுள்ளார்.
இதனால் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்வோர் அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பு மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் தெளிவு வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக இருந்தாலும், தற்காலிக ஏற்ற இறக்கங்கள் லாபம் பதிவு செய்ய வாய்ப்பளிக்கலாம்.
இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச ஸ்பாட் விலை ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4033 டாலராக குறைந்து வருகிறது. எம்சிஎஸ் சந்தையில் 10 கிராம் 24 தங்கத்திற்கான பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 1.31 சதவீதம் சரிந்து 1,21,838 ரூபாயாக குறைந்துள்ளது. ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 540 ரூபாய் குறைந்து 1,24,910 ரூபாயாக உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?



Click it and Unblock the Notifications