தங்கம், வெள்ளி விலையில் இன்று பெரும் சரிவைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்ததுபோலவே நடந்துள்ள வேளையில், இந்த சரிவு இன்று ஒரு நாள் மட்டும் தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு வர்த்தகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தைப் பார்க்கும்போதும் இன்றைய சரிவு ஒரு ஸ்ட்ரக்சுரல் சேஞ்ச் ஆக மட்டுமே விளங்குகிறது.
செவ்வாய்க்கிழமை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 4200 ரூபாய் குறைந்து, ஆம் நீங்கப் படிப்பது சரி தான் கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து 10 கிராம் தங்கம் விலை 1,26,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 4580 ரூபாய் குறைந்து 1,37,460 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 3360 ரூபாய் குறைந்து 1,00,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை நேற்று எம்சிஎக்ஸ் சந்தையில் பதிவான 22000 ரூபாய் சரிவைப் பிரதிபலித்துள்ளது. இன்று சுமார் 23000 ரூபாய் குறைந்து 2,58,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
அனைத்தையும் விட முக்கியமான பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 7710 ரூபாய் குறைந்து 61800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கடந்த 5 வருடத்தில் இல்லாத பெரும் சரிவை இன்று பதிவு செய்துள்ளது.
இன்றைய சரிவு தொடருமா..? என்பது தான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதிலை நாம் இந்தியச் சந்தையில் தேட முடியாது, சர்வதேச வர்த்தக சந்தையில் தான் தேட முடியும். காரணம் இந்தியாவில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை சர்வதேச வர்த்தக சந்தையின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 4550 டாலரில் வர்த்தகமாகி 4330 டாலர் வரையில் குறைந்தது, இதன் வாயிலாக இன்று இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 4580 ரூபாய் குறைந்து 1,37,460 ரூபாயாக உள்ளது.
ஆனால் இன்று எம்சிஎஸ் சந்தையிலும் சரி, சர்வதேச ஸ்பாட் சந்தையிலும் சரி தங்கம் விலை உயர்வுடனே உள்ளது. இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வர்த்தக நேரத்திலும் தொடர்ந்தால் தங்கம் விலை நாளை உயரும் என்பது தற்போதைய சந்தை கணிப்பு.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.66 சதவீதம் உயர்ந்து 1,35,826 ரூபாயாக உள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் 31.51 டாலர் உயர்ந்து ஒரு அவுன்ஸ்-க்கு 4,363.33 டாலராக உள்ளது. இதேபோல் வெள்ளியைப் பார்க்கும் போது எம்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 4.21 சதவீதம் உயர்ந்து 2,33,885 ரூபாயில் உள்ளது, அதாவது நேற்று பதிவான 9 சதவீத சரிவில் 50 சதவீதத்தை இன்று காலை வர்த்தகத்திலேயே மீண்டுள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் பார்க்கும் போது 72 டாலரில் இருந்து 2.29 டாலர் உயர்ந்து 74.4 டாலராக உயர்ந்துள்ளது.
இவை உயர்வு பாதை ஐரோப்பியச் சந்தை நேரத்திலும், அமெரிக்கச் சந்தை நேரத்திலும் தொடர்ந்தால் நாளை இந்திய சந்தையில் விலை உயரும். இதனால் இந்த சரிவை தங்கம் வாங்குவோர் பயன்படுத்தலாம்.

இதேவேளையில் தங்கம், வெள்ளி விலை 2026ஆம் ஆண்டிலும் உயர்வதற்கு 10க்கு 10 பொருத்தம் பக்காவாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒருபக்கம் வட்டி குறைப்பிற்கான வாய்ப்பு, மறுபுறம் போர் பதற்றங்கள்
உக்ரைன் போர், சீனாவின் தைவான் அருகே ராணுவ நடவடிக்கை, நைஜீரியா மீதான அமெரிக்க நடவடிக்கை ஆகியவை பதற்றத்தை அதிகரிக்கின்றன. இத்தகைய நிச்சயமற்ற நிலைகள் தங்கத்தின் தேவையைத் தொடர்ந்து ஆதரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications