திடீரென உயரும் தங்கம், வெள்ளி விலை..!! இனி ஏறுமுகம் தானா? இப்போதே நகை வாங்கிடலாமா?

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சர்ரென உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இன்றைய தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 13,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 230 ரூபாய் விலை கூடி இருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,050 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,10 ,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் 1840 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,12,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

திடீரென உயரும் தங்கம், வெள்ளி விலை..!! இனி ஏறுமுகம் தானா? இப்போதே நகை வாங்கிடலாமா?

22 கேரட் தங்கம் 10 கிராம் நேற்று 1,38,200 ரூபாய்க்கு விற்பனையானது இன்று 2300 ரூபாய் விலை கூடி 1,40, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று கிராமுக்கு 170 ரூபாய் விலை குறைந்த தங்கம் இன்று கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை 251 ரூபாய் விலை உயர்வு கண்டு 15,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் 2510 ரூபாய் விலை உயர்ந்து 1,53,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 190 ரூபாய் விலை உயர்ந்து 11,720 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1520 ரூபாய் விலை உயர்ந்து 93,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று 265 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று ஐந்து ரூபாய் விலை கூடி 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

ஈரான் போர் தொடர்பான தகவல்கள் தான் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. முதலில் அமெரிக்கா ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது . இந்த நிலையில் தற்போதைக்கு அந்த திட்டத்தை நிறுத்திவை வைத்திருப்பதாக கூறி இருக்கிறது. இதனால் பதற்றம் ஓரளவு தணிந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருப்பதால் இந்திய சந்தையிலும் சில்லறை வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+