தமிழ்நாட்டில் இன்று தங்கம் , வெள்ளி விலைகள் தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன. வார இறுதி நாள் என்பதால் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இதே விலைக்கு தான் தங்கம், வெள்ளி விற்கப்படும். இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 130 ரூபாய் விலை உயர்ந்து 14,285 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1040 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நேற்று, இன்று என இரண்டு நாட்களீலேயே தங்கம் விலை வேகமாக உயர்ந்துவிட்டது. இந்த இரண்டு நாட்களில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 275 ரூபாய் விலை கூடியுள்ளது. ஒரு சவரன் என பார்த்தால் 2,200 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. 10 கிராமுக்கு 2,750 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. இந்த வாரத்தில் 3 நாட்கள் தங்கம் விலை கூடியுள்ளது 3 நாட்கள் விலை குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 142 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15584 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 கேரட் தங்கம் 300 ரூபாயும் 10 கிராமுக்கு 3000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,055 ரூபாயும், ஒரு சவரன் 96,440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று உயர்வு கண்டுள்ளது.ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை உயர்ந்து 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.60 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 7 நாட்களாக மாறாமல் இருந்து நேற்றும், இன்றும் விலை உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் கிராமுக்கு 10 ரூபாயும் கிலோவுக்கு 10,000 ரூபாயும் விலை சரிந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி நேற்று முன் தினம் வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது . இதனால் வியாழக்கிழமை தங்கம் விலை குறைந்தது, ஆனால் நேற்றும் இன்றும் விலை உயர்ந்துவிட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததே தங்கம் விலை திடீரென உயர்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை இப்படி ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


