புத்தாண்டு விடுமுறை முடிந்து பெரும்பாலான பங்குச்சந்தைகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், முதலீட்டாள்ர்கள் புதிய ஆண்டுக்கான முதலீட்டுகளை செய்ய துவங்கியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு கணக்கை லாபகரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக தங்கம், வெள்ளியை விற்கும் செயல்முறையும் குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று உள்நாட்டு சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1400 ரூபாய் உயர்ந்து 12580 ரூபாயாக உள்ளது, இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 1120 ரூபாய் உயர்ந்து 1,00,640 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 4000 ரூபாய் உயர்ந்து 2,60,000 ரூபாயாக உள்ளது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு கண்டுள்ளன. ஜனவரி 2 வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் உள்நாட்டு ஸ்பாட் தேவை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) இல் தங்கம் மற்றும் வெள்ளி ஃப்யூச்சர்ஸ் விலைகள் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.
இன்று காலை 9:10 மணி அளவில் MCX சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் தங்கம் ஃப்யூச்சர்ஸ் 0.69 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,36,742 ஆக வர்த்தகமானது. அதேநேரம் மார்ச் மாதம் முடியும் வெள்ளி ஃப்யூச்சர்ஸ் 1.74 சதவீதம் ஏற்றத்துடன் கிலோவுக்கு ரூ.2,39,967 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் வலுவான போக்கு 2026 இலும் தொடர்வதாக தெரிகிறது. உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரிப்பது விலையை உயர்த்த உதவுகிறது.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 0.9 சதவீதம் உயர்ந்து அவுன்ஸுக்கு 4,351.70 டாலராகவும், ஸ்பாட் வெள்ளி 2 சதவீதம் ஏற்றத்துடன் 72.63 டாலராகவும் வர்த்தகமானது. அமெரிக்க டாலரின் மதிப்பு மற்ற நாணயங்களுக்கு எதிராக குறைந்தது இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அடுத்த 3 மாதத்திற்கு சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸுக்கு 4500 முதல் 5000 டாலர் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வெள்ளி விலையில் வேகமாக உயர்ந்து வருகிறது. வெள்ளியின் தொழில்துறை தேவை மற்றும் முதலீட்டு ஆர்வம் தடாலடியாக இதன் விலையை உயர்த்தி வருகிறது.
நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை போர்ட்ஃபோலியோவில் சேர்த்து பயனடையலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சந்தை ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொண்டு முதலீடு செய்வது அவசியம்.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?



Click it and Unblock the Notifications