மாஸ் காட்டும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. ஆபரண பிரியர்களுக்கு நல்ல சான்ஸ்!

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு குறைந்து காணப்படுகின்றது. ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது.

இது வலுவான டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் எதிரொலிக்கிறது.

குறிப்பாக டாலரின் மதிப்பானது மீண்டும் 3 மாத உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தான் இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 55000 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

இவ்வளவு சரிவா?

இவ்வளவு சரிவா?

இது 10 கிராம் தங்கத்தின் உச்சமான 58,847 ரூபாயில் இருந்து பார்க்கும்போது 4000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 61,580 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையையும் இன்று எட்டியுள்ளது. இதுவும் அதன் லைஃப் டைம் உச்சமான 77,949 ரூபாயில் இருந்து பார்க்கும்போது 16,500 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.

 டாலர் மதிப்பு உச்சம்

டாலர் மதிப்பு உச்சம்

பங்கு சந்தை நிபுணர்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது டாலரின் மதிப்பால் அழுத்தத்தில் காணப்படுகின்றது. டாலரின் மதிப்பானது 105 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், புராபிட் புக்கிங் செய்யவும் வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் காமெக்ஸ் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1810 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.

முக்கிய சப்போர்ட் லெவல்கள்

முக்கிய சப்போர்ட் லெவல்கள்

தங்கத்தின் உடனடி சப்போர்ட் லெவல் 54,500 ரூபாயாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சர்வதேச சந்தையில் 1790 டாலர்களை தொடலாம். அதனையும உடைத்தால் 1760 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் 54,000 மற்றும் 53,800 ரூபாய் என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியின் முக்கிய லெவல்கள்

வெள்ளியின் முக்கிய லெவல்கள்

இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் விலையானது கிலோவுக்கு 61,000 ரூபாயினை எட்டலாம் எனவும், அதனை உடைத்தால் 58,000 ரூபாயினையும் எட்ட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கனித்துள்ளனர்.
இதே டாலரில் 19.50 டாலர் மற்றும் 18.80 டாலர் என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 21 மற்றும் 21.70 டாலர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1819.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து., பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.34% குறைந்து, 20.082 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 76 ரூபாய் குறைந்து, 54,835 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 197 ரூபாய் குறைந்து, 61,615 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 5155 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து, 41,240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 5625 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, 56,250 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 10 பைசா குறைந்து, 67.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 67,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+