சர்ரென குறைந்த தங்கம் விலை..!! பக்ரீத் நாளில் வந்த குட் நியூஸ்..!! 3 நாட்களில் தலைகீழாக மாறிய விலை!!

நாடு முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்து பொது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சென்னையில் திங்கட்கிழமை தவிர்த்து செவ்வாய் ,புதன், வியாழன் ஆகிய இந்த மூன்று நாட்களுமே தங்கத்தின் விலை தொடர்ந்து விலை சரிந்த வண்ணமே இருக்கிறது.

சென்னையில் கடந்த 25ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் 50 ரூபாய் விலை கூடி 14,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே செவ்வாய்க்கிழமை அன்று 50 ரூபாய் விலை குறைந்தது , அதேபோல புதன்கிழமை அன்று கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்தது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 150 ரூபாய் விலை சரிவடைந்து 14,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்ரென குறைந்த தங்கம் விலை..!! பக்ரீத் நாளில் வந்த குட் நியூஸ்..!! 3 நாட்களில் தலைகீழாக மாறிய விலை!!

ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1200 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது. ஒரு பவுன் தங்கம் 1,16,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய இந்த மூன்று நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 280 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2240 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது.

Also Read

தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விலை குறைவு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். ஏனெனில் ஈரான் போர் தொடர்பான நிகழ்வுகள் தான் தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தையே தருகின்றன. அமெரிக்கா திடீரென ஹார்முஸ் ஜலசந்தி அருகே குண்டு மழை பொழிந்தது. போர் தீவிரம் அடைந்து விடும் என்ற அச்சத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது அதுதான் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.

Recommended For You

24 கேரட் தங்கம் 15,818 ரூபாய்க்கும் 10 கிராம் 1,58,180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 97,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பல நாட்களாக ஒரே விலையில் இருந்த வெள்ளியின் விலை இன்று குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் விலை குறைந்து எனது 285 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+