தங்கம் விலை ஏறினா, வெள்ளி விலையும் ஏறும், இதுதான் நமக்கு தெரிஞ்ச கணக்கு? ஆனா இப்போ சந்தையில நடக்குறதே வேற. தங்கம் ஒரு பக்கம் எகிறிட்டு இருந்தாலும், அதையும் தாண்டி வெள்ளி ஜெட் வேகத்துல பாய்ஞ்சிட்டு இருக்கு. இதனால் தான் Gold-Silver Ratio அதாவது தங்கம்-வெள்ளி விகிதம் இப்ப தலைகீழா சரிஞ்சிருக்கு. இது முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்ல வருகிறது. இப்போது தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா, வெள்ளியை வாங்கலாமா என பல கேள்விகள் எழுந்து வருகிறது.
ஆபரண நகை வாங்குறவங்களுக்கு இது வெறும் விலை ஏற்றம் மட்டும்தான். ஆனா, புத்திசாலித்தனமான முதலீடு செய்றவங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சிக்னல். வெள்ளி இவ்வளவு வேகமாக ஏறுறது ஏன்? தங்கம் - வெள்ளி விகிதம் சரிவு தங்கத்தின் விலையை இன்னும் எங்க கொண்டு போய் நிறுத்தும்? நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை இப்போ தங்கத்துல போடணுமா இல்ல வெள்ளியிலே போடணுமா? முதலீட்டு உலகமே உற்று நோக்கும் இந்த ரேஷியோ ரகசியத்தையும், இது உங்க பாக்கெட்டை எப்படி பாதிக்கப்போகிறது என்பதையும் விரிவாக பார்ப்போம்.

கடந்த 12 மாதங்களில் வெள்ளி விலையானது 200% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே தங்கம் 80% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இந்த ஏற்றத்தில் மத்தியில் தான் தங்கம்- வெள்ளி விகிதமானது சரிவைக் கண்டுள்ளது. இதை என்ன தான் சொல்ல வருகிறது என்பதற்கு முன்னால், தங்கம் - வெள்ளி விகிதம் என்றால் என்ன என முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்கம் - வெள்ளி விகிதம்!
ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்குவதற்கு, எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பதை குறிப்பதே இந்த விகிதம். இந்த விகிதமானது அதிகமாக இருந்தால் வெள்ளி விலை மலிவாக கிடைக்கிறது என அர்த்தம். ஒரு வேளை இந்த விகிதமானது குறையத் தொடங்கினால், முதலீட்டாளர்கள் தங்கத்தை கவனத்தில் கொள்வார்கள். தங்கத்தை நோக்கி தங்கள் முதலீட்டு பாதையை திருப்புவார்கள். ஆக தற்போது தங்கம் - வெள்ளி விகிதம் குறைந்திருப்பது, தங்கம் விலையானது மேலும், உயரும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இவ்வளவு வித்தியாசமா?
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்று காலத்தில் தொட்ட உச்சமான 127 என்பதில் இருந்து. 50-க்கும் கீழே சரிந்தது. இதுகுறித்து INV அசெட் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷல் தசானி, கடந்த ஏப்ரல் 2025ல் 1 கிலோ தங்கத்தை விற்பனை செய்தால், சுமார் 110 கிலோ வெள்ளியை வாங்க முடிந்தது. ஆனால் இன்று அதே 1 கிலோ தங்கத்திற்கு வெறும் 47 கிலோ வெள்ளி மட்டுமே கிடைக்கிறது. இது ஏதோ சாதாரண விலை மாற்றம் கிடையாது. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளியின் மதிப்பு உலக அளவில் ஒரு பெரிய கட்டமைப்பையே மாற்றியமைத்துள்ளதை காட்டுகிறது என கூறியுள்ளார்.
தங்கம்-வெள்ளி விகிதம் சரிவு உணர்த்துவது என்ன?
இந்த விகிதம் சரிவது இரண்டு முக்கிய விஷயங்களை காட்டுகிறது. ஒன்று முதலீட்டாளர்கள் வெள்ளியின் முழு திறனையும் உணரத் தொடங்கி உள்ளனர். இரண்டாவது வரும் நாட்களில் தங்கம், வெள்ளியை விட அதிக லாபத்தை தரக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. வெள்ளி என்பது ஒரு முதலீட்டு பொருளாக மட்டுமல்லாமல், சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின் கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான மிக முக்கியமான தொழில் துறை உலோகமாகவும் மாறியுள்ளது. இதனால் அதன் தேவை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தங்கம்-வெள்ளி விகிதத்தின் நீண்ட கால சராசரி 70 ஆகும். ஆனால் தற்போது இது 50-க்கு அருகில் உள்ளது. வரலாற்று ரீதியாக இவ்வளவு குறைவான விகிதம் நீண்ட காலம் நிலைக்காது. மீண்டும் இது பழைய நிலைக்கு (70-க்கு) உயரும். அப்படி இந்த விகிதம் மீண்டும் 65-70 நிலைக்கு திரும்பினால், அது தங்கத்தின் விலையேற்றத்தை ஆதரிக்கும். எனவே, அபாயத்தை குறைக்க தங்கத்தில் அதிக முதலீடு செய்வது சிறந்தது என அந்த நிறுவனம் பரிந்துரைக்கிறது.
வெள்ளியின் போக்கு இது தான்?
தொழில்துறை தேவை மற்றும் பற்றாக்குறை காரணமாக வெள்ளியின் நீண்ட கால வளர்ச்சி வலுவாக இருந்தாலும், குறுகிய காலத்தில் அதன் லாபம் மற்றும் ரிஸ்க் சமநிலையற்று இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. குறிப்பாக தொழில் துறை தேவை காரணமாக வெள்ளியில் நீண்ட கால லாபம் நிச்சயம். இருப்பினும், சமீபத்திய அதிரடி விலை ஏற்றம் சந்தையில் ஏற்ற இறக்கத்தை அதிகரித்துள்ளது. எனவே, இந்தச் சூழலில் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஏற்ற இறக்கத்தை சமாளிக்க உதவும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications