தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள் கவனத்தை ஈர்க்கும். ஆமால் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போரில் நிலை தலைகீழாக உல்ளது, ஆனால் போருக்கு பின்பு முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் வரும் என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இத்தகையை காலக்கட்டத்தில் மீண்டும் தங்கம், வெள்ளி முக்கிய முதலீடாக மாறும் என நிலைப்பாடு உள்ளது.

இந்த இரு உலோகங்களின் விலைகளை ஒப்பிட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும் முக்கியமான அளவுகோல் தான் Gold-Silver Ratio. இந்த விகிதம் தங்கத்தின் விலை வெள்ளியுடன் ஒப்பிடும்போது அதிகமா அல்லது குறைவா என்பதை முதலீட்டாளர்களுக்கு தெளிவாக காட்டுகிறது. இதை வைத்து தான் பெரும்பாலான நீண்ட கால முதலீடுகளும், பெரும் தொகை முதலீடும் நடக்கிறது.

இந்த விகிதம் கணக்கிடப்படும் முறை மிகவும் எளிமையானது. இதை தெரிந்திக்கொண்டாலே தங்கத்தில் எப்போது முதலீடு செய்யலாம் என்ற ஐடியா சாமானிய மக்களுக்கு கிடைத்துவிடும்.

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

Gold-Silver Ratio
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையால் வகுத்தால் கிடைக்கும் எண்ணே தங்கம்-வெள்ளி விகிதம் ஆகும். உதாரணமாக, தங்கம் ஒரு அவுன்ஸ் $5,000 ஆகவும் வெள்ளி ஒரு அவுன்ஸ் $80 ஆகவும் இருந்தால், 5000 ÷ 80 = 62.5 என்ற விகிதம் கிடைக்கும்.

இதன் பொருள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு சுமார் 62.5 அவுன்ஸ் வெள்ளிக்கு சமம் என்பதாகும். இந்த விகிதத்தை வைத்து முதலீட்டாளர்கள் அந்த நேரத்தில் தங்கமா அல்லது வெள்ளியா முதலீட்டுக்கு சிறந்தது என்பதை தீர்மானிக்க முடிகிறது.

Also Read

உலக அரசியல் பதற்றம் சந்தையை எப்படி பாதிக்கிறது?
தற்போது தங்கம்-வெள்ளி விகிதம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணம் உலகளாவிய அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதே ஆகும். குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உருவாகியுள்ள மோதல் உலக நிதிச் சந்தைகளில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவார்கள். அப்போது அதிகமாக முதலீடு தங்கத்தில் செய்ய விரும்புகிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது. வெள்ளியும் மதிப்புள்ள உலோகம் என்றாலும், அதன் தேவை பெரும்பாலும் தொழிற்துறை பயன்பாட்டை சார்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் வெள்ளி அதிகமாக பயன்படுத்தப்படுவதால், அதன் விலை பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தே மாறுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை:
பொதுவாக போர் அல்லது அரசியல் பதற்றம் ஏற்பட்டால் தங்க விலை உயர்வதே வழக்கம். ஆனால் இந்த மாதத்தில் இரு உலோகங்களின் விலைகளும் குறைந்துள்ளன. தற்போதைய நிலையில் தங்கத்தின் சர்வதேச விலை சுமார் 5,000 டாலர் அருகில் உள்ளது. மார்ச் மாதத்தில் இதுவரை தங்க விலை சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வெள்ளி விலை மிகவும் அதிகமாக சரிந்துள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 80 டாலருக்கு கீழ் வர்த்தகம் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் வெள்ளி விலை சுமார் 15.5 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதனால் தங்கத்தை விட வெள்ளி அதிகமாக வீழ்ச்சி கண்டதால் தங்கம்-வெள்ளி விகிதம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

எண்ணெய் விலை உயர்வு தங்க சந்தையை எப்படி பாதிக்கிறது?
இந்த சந்தை மாற்றங்களில் மற்றொரு முக்கிய காரணியாக கச்சா எண்ணெய் விலை உயர்வும் உள்ளது. மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான Strait of Hormuz பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தற்போது Brent Crude சுமார் 105 டாலர் அளவிலும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 98 டாலர் அளவிலும் வர்த்தகம் செய்கின்றன.

கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது. பணவீக்கம் அதிகரித்தால் அமெரிக்காவின் மத்திய வங்கி அமைப்பான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைப்பதை தாமதப்படுத்தும். இதனால் புதிய பெட் தலைவர் வந்தாலும் வேலைக்கு ஆகாது, டிரம்ப் கனவு நிறைவேறாது.

வட்டி விகிதங்கள் நீண்ட காலம் அதிகமாக இருந்தால், வட்டி வருமானம் தரும் முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மாறுவார்கள். தங்கம் வட்டி வருமானம் தராத முதலீடு என்பதால், இது தங்கத்தின் தேவை குறைக்கும். போர் காலத்தில் தங்கம், வெள்ளி விலை குறைய இது தான் மைய காரணம்.

Recommended For You

வெள்ளி விலை ஏன் அதிகமாக சரிகிறது?
வெள்ளி வெறுமென உலோகம் இல்லை, தங்கத்தை காட்டிலும் தொழிற்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உலோகம். உலக பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தால் தொழிற்துறைகளில் உற்பத்தி அதிகரிக்கும். அப்போது வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும். ஆனால் தற்போதைய மத்திய கிழக்கு பதற்றம் உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

உலகளாவிய வளர்ச்சி மந்தமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் காரணத்தால் தொழிற்துறைகளில் உற்பத்தி குறையலாம். இதனால் வெள்ளிக்கான தேவை குறையும். இதுவே வெள்ளி விலை தங்கத்தை விட வேகமாக சரிவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய தங்கம்-வெள்ளி விகிதம்
தற்போது தங்கம்-வெள்ளி விகிதம் சுமார் 62.5 அளவில் உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த விகிதம் 107 வரை சென்றிருந்தது. அப்போது வெள்ளி விலை வேகமாக உயர்ந்திருந்தது.

Tata Mutual Fund சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விகிதம் எதிர்காலத்தில் 70-72 அளவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. உலக அரசியல் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகமாக வாங்கினால் இந்த உயர்வு ஏற்படலாம் என மதிப்பிடப்படுகிறது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்?
ஈரான் மோதல் மேலும் தீவிரமானால் தங்கம்-வெள்ளி விகிதம் 65 முதல் 70 வரை உயரக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், கச்சா எண்ணெய் விலை உயர்வும் பொருளாதார நிலையற்ற தன்மையும் வெள்ளிக்கு தங்கத்தை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் உலக அரசியல் பதற்றம் குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டும் வலுப்பெற்றால் நிலைமைகள் மாறக்கூடும். அப்போது தொழிற்துறைகளில் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும். இதனால் வெள்ளி விலை தங்கத்தை விட வேகமாக உயரக்கூடும்.

அப்படி நடந்தால் தங்கம்-வெள்ளி விகிதம் 50-55 அளவிற்கு குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, கோல்டு சில்வர் விகிதம் 50க்கு கீழே சென்றால் தற்போதைய தங்க விலை நிலையை வைத்துக் கொண்டால் வெள்ளி விலை $100க்கு மேல் உயரக்கூடும்.

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

10 ஆண்டு வரலாறு
கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக தங்கம்-வெள்ளி விகிதம் சுமார் 80 அளவில் இருந்துள்ளது. பொதுவாக சந்தையில் uncertainty அதிகமாக இருந்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகமாக வாங்குவதால் இந்த விகிதம் உயர்கிறது. ஆனால் உலக பொருளாதாரம் வலுவாக வளர்ந்தால் தொழிற்துறை தேவை அதிகரிப்பதால் வெள்ளி விலை உயர்ந்து இந்த விகிதம் குறையும்.

முதலீட்டாளர்களுக்கான எளிய விதி
கமோடிட்டி சந்தை ஆய்வாளரான Nirpendra Yadav முதலீட்டாளர்கள் ஒரு எளிய விதியை பின்பற்றலாம் என கூறுகிறார். அதை "80-50 விதி" என அழைக்கப்படுகிறது.

Gold-Silver Ratio 80க்கு மேல் இருந்தால் வெள்ளி குறைந்த விலையில் இருக்கிறது என்பதால் வெள்ளியை வாங்கலாம். விகிதம் 50க்கு கீழே சென்றால் தங்கம் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் இருக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவது நல்லது. 50 முதல் 80 வரை இருந்தால் தங்கமும் வெள்ளியும் சம அளவில் வைத்திருப்பது பாதுகாப்பான முதலீட்டு முறையாக கருதப்படுகிறது என விளக்குகிறார்.

இது தான் பெரும் முதலீட்டாளர்கள் பின்பற்றும் முக்கியமான ஃபார்மூலா. இதை அடிப்படையாக வைத்து தங்கத்திலும், வெள்ளியிலும் முதலீடு செய்யும் முடிவை எடுக்கலாம், இதேபோல் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து முதலீடுகளும் நீண்ட கால முதலீடாகவே கருத வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+