இன்று தமிழ்நாட்டில் தங்க விலை கணிசமாக குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,928-ஆக உள்ளது, நேற்றை விட ரூ.207 குறைவு. இது பண்டிகை காலத்திற்கு முன் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.14,600-ஆக வர்த்தகமாகிறது. இதுவும் ரூ.190 சரிவை சந்தித்துள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.12,600-ஆக உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாடு நகரங்களில் இன்று தங்க விலை குறைந்து காணப்படுகிறது. ஆயினும் முதலீட்டாளர்களின் கணிப்பு தங்கம் மீதான முதலீட்டுக்கு மிகவும் முக்கியமாதாக இருக்கும் காரண்ததால், நிபுணர்களின் கணிப்பை தெரிந்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் முதலீடு செய்வது உத்தமம்.

தங்கம் விலை சரிவுக்கு என்ன காரணம்..?
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று கணிசமாக சரிந்துள்ளது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் சுமார் 5,050 டாலரில் 1% குறைவுடன் வர்த்தகமானது. அதேபோல் ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 83.50 டாலரில் கிட்டத்தட்ட 1% சரிவை சந்தித்தது.
இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் ஜனவரி 2026 வேலைவாய்ப்பு தரவு. ஜனவரி மாதம் 1,30,000 புதிய வேலைவாய்ப்புகள் சேர்ந்தன, சந்தை எதிர்பார்த்த 70,000-ஐ விட அதிகம். மேலும் வேலையின்மை விகிதமும் எதிர்பாராத விதமாக குறைந்தது. இது அமெரிக்க தொழிலாளர் சந்தை வலுவாக மீண்டு வருவதை காட்டுகிறது.
இதனால் அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதத்தை விரைவில் குறைக்காது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஜூன் மாத வட்டி குறைப்பு நம்பிக்கை ஜூலைக்கு தள்ளப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம்-வெள்ளி மீதான ஆர்வத்தை குறைத்தனர்.
நிபுணர்களின் கணிப்பு:
தங்கம் விலை:
தங்கம் விலை இன்று முதல் வரும் நாட்களில் பெரிய அளவில் உயராமல், ரூ.1,57,000 முதல் ரூ.1,60,000 வரையிலான வரம்புக்குள் தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. MCX சந்தையில் ஏப்ரல் மாதம் முடியும் தங்க ஃபியூச்சர்ஸ் இந்த வரம்பில் இருக்கும் என்றும், சற்று எதிர்மறை போக்கு (negative undertone) தொடரும் என்று IndusInd Securities நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளர் Jigar Trivedi கூறியுள்ளார்.
வெள்ளி விலை:
சர்வதேச சந்தையில் பலவீனமான நிலை காரணமாக MCX மார்ச் மாதம் முடியும் வெள்ளி ஃபியூச்சர்ஸ் ரூ.2,57,000 அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது என்று Jigar Trivedi எச்சரித்துள்ளார். உலகளாவிய விலை போக்கு இந்தியாவில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
அஜய் கேடியா கணிப்புகள்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 5,000 டாலர் அளவுக்கு உடனடி ஆதரவு இருக்கும் என்றும், 5,120 டாலர் அருகே எதிர்ப்பு உள்ளது என்றும் Ajay Kedia கூறியுள்ளார். மேலும் தங்கம் விலை தற்போதை வர்த்தக சூழ்நிலையில் 5,100 டாலர் தாண்ட முடியாத நிலையில் சிறு சரிவு ஏற்படலாம். மேலும் தங்கம் விலை 5,080 டாலர் கீழ் உடைத்தால் 5,040-5,012 டாலர் வரை விலை குறையலாம் என்று அவர் எச்சரித்தார்.
தமிழ்நாட்டு நுகர்வோருக்கு என்ன பொருள்?
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் தங்கம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது முக்கிய தகவல். MCX தங்கம் ரூ.1,56,000 அருகே ஆதரவு பெறலாம் என்றும், ரூ.1,60,500 அருகே எதிர்ப்பு இருக்கும் என்றும் Ajay Kedia கூறியுள்ளார். தற்போதைய சந்தை நிலையில் பெரிய உயர்வு இல்லாததால், திருமணம், பண்டிகை காலத்தில் தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் இப்போது காத்திருக்கலாம் அல்லது சிறு சிறு தொகையில் வாங்கலாம்.
இந்தியாவில் தங்க விலை உலக சந்தை மற்றும் டாலர் போக்கின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்க வாங்கும் மக்கள் இந்த கணிப்புகளை கவனத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லது. மேலும் இன்றைய விலை சரிவு உலக சந்தை மற்றும் அமெரிக்க டாலர் போக்கு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications