நம் நாட்டு மக்களுக்கு தங்க நகைகள் வெறும் அணிகலன்கள் மட்டுமல்ல, அவசர மற்றும் தேவையான நேரங்களில் பயன்படும் நிதி கருவியாக இருக்கிறது. மேலும் பிறந்த நாள் விழா முதல் திருமணம் வரையிலான சடங்குகள் மற்றும் விழாக்களில் மஞ்சள் உலோகமான தங்கத்துக்கு முக்கிய இடம் உண்டு.
இதனால் நம்மவர்கள் பணம் வரும் போதெல்லாம் தங்கத்தை முடிந்த அளவுக்கு வாங்கி வைத்து கொள்கின்றனர். இது போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தேவையை பூர்த்தி செய்ய தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதி மீது விதிக்கப்படும் வரியால் உள்நாட்டில் அதன் விலை உயருகிறது.

இறக்குமதி செலவின தொகையும் கடைசியில் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும் என்பதால் உள்நாட்டில் தங்கத்தின் விலை உயருகிறது. உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளதால், கடத்தல் தங்கம் உள்நாட்டுக்குள் அதிகளவில் வரத்தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், மக்களுக்கு விலை நிவாரணம் வழங்கும் மற்றும் தங்க கடத்தலை தடுக்கும் நோக்கிலும் 2024 ஜூலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. இறக்குதி வரி குறைப்பால், தங்க கடத்தல் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் தெரிவித்தார்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் கூறுகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விகிதம் குறைக்கப்பட்டபிறகு, தங்க கடத்தலில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான காலத்தில் பல்வேறு விமான நிலையங்களில் சங்க மற்றும் டிஆர்ஐ அதிகாரிகள் ரூ.544 கோடி மதிப்புள்ள 847 கிலோ தங்கத்தை கைப்பற்றினர் என தெரிவித்தார். அதேசமயம், தங்க கடத்தல் குறைந்த குறித்த புள்ளிவிவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் சுங்க அதிகாரிகள் உள்பட சிபிஐசி-யால் 4,869.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மெலம் 1,922 பேர் சிபிஐசியால் கைது செய்யப்பட்டனர். கடந்த நிதியாண்டில் டிஆர்ஐ அதிகாரிகள் மட்டுமே வங்கதேசம் மற்றும் மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட 1,319 கிலோ கடத்தல் தங்கத்தை கைப்பற்றினர்.
இது சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது. சிபிஐசி-யின் கீழ் இயங்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) நாட்டில் கடத்தல் தடுப்பு துறையில் இந்திய சுங்கத்தின் உச்ச நிறுவனமாகும்.


Click it and Unblock the Notifications