டெல்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவில் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 3.083 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவினை அடுத்து சர்வதேச அளவில் தங்கம் பயன்பாடானது இந்தியாவில் தான் அதிகளவு உள்ளது. இந்தியாவின் நுகர்வு என்பது அதிகம். இதனால் இந்தியா அதிகளவில் தங்கம் இறக்குமதியினை செய்து வருகின்றது.
இதன் காரணமாக இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அதோடு ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வந்தது.
இறக்குமதி வரி அதிகம்
இதன் காரணமாக இந்திய அரசு தங்கம் இறக்குமதியினை குறைக்கும் விதமாக, இறக்குமதி வரியை அதிகமாகவே வைத்துள்ளது. இறக்குமதி வரி என்பதோடு கூடுதலாக ஜிஎஸ்டி வரியும் இதனுடன் சேர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இருப்பதை விட இங்கு அதிகம் எனலாம்.
கடத்தல் அதிகரிப்பு
இதனால் இறக்குமதியானது குறையும் என அரசு திட்டமிட்டது. இது ஓரளவுக்கு கைகொடுக்கவும் செய்தது எனலாம். ஆனால் அதே சமயம் தங்கம் இறக்குமதி குறைந்து, தங்கம் கடத்தல் என்பது மிகபெரியளவில் அதிகரித்துள்ளது. இந்த தங்க கடத்தலில் கேரளாவின் பங்கு மிக அதிகம். கேரளாவில் மட்டும் 690 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இப்படியா?
இதற்கு அடுத்தப்படியாக மகராஷ்டிராவில் 474 கிலோவும், தமிழ் நாட்டில் 440 கிலோவும், மேற்கு வங்கத்தில் 369 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்க கடத்தல் குறித்து நிதித்துறை இணை அமைச்சர் பங்ஜ் சவுத்ரி லோசபாவில், தங்க கடத்தலை தடுக்க அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி வரி எவ்வளவு?
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் இறக்குமதியினை குறைக்கும்பொருட்டு தங்கம் மீதான இறக்குமதி வரியினை அரசு, 7.5%ல் இருந்து, 12.5% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் கடத்தல் என்பது 3 வருடத்தில் இல்லாத அளவுக்கு உச்சம் எட்டியுள்ளது.
கொரோனாவுக்கு பின்
இந்த அதிகரிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு அரசு விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. அரசு வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரூபாயின் மதிப்பும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்த்தது. ஆனால் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் அதுவும் முடியாமல் போனது. எனினும் தங்கம் இறக்குமதி அதிகரித்திருக்கும்பட்சத்தில் இது இன்னும் நிலைமையை மோசமடைய செய்திருக்கலாம்.
அதிகபட்சம் எப்போது?
நடப்பு ஆண்டில் இதுவரையில் 3083.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த 2019ம் ஆண்டில் 3673 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய காலமாக விமான நிலையங்களில் அயன் பட பாணியில் தங்கம் கடத்தல் என்பது கணிசமாக அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. ஆங்காங்கே அவ்வப்போது தங்கம் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகின்றது. எனினும் தங்கம் கடத்தல் என்பது குறைந்தபாடாக இல்லை எனலாம்.
ஏன் கடத்தல் அதிகரிப்பு?
இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. தங்கத்தின் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தங்கம் விலையானது உச்சம் எட்டி வருகின்றது. இதற்கிடையில் இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பானது, மேற்கொண்டு கடத்தலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications