புதன்கிழமை அமெரிக்க வர்த்தக நேரத்தில் தங்க விலை சுமார் 1% சரிவடைந்து, இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த வீழ்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருப்பது அமெரிக்க ரிசர்வ் வங்கியின் 25 அடிப்படை புள்ளிகள் பென்ச்மார்க் வட்டி குறைப்பு தான்.
முதலீட்டு சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்தபடியே இந்த வட்டி விகிதக் குறைப்பு நிகழ்ந்தது ஒருப்பக்கம் நிம்மதி அளித்தாலும், தங்கம் மற்றும் பிட்காயின் மீது முதலீடு செய்துள்ளவர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் தற்போது உள்ளனர். பெடரல் ரிசர்வின் வட்டி விகித குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி 1 மணிநேரத்தில் தங்கம் 1 சதவீதமும், பிட்காயின் 6 சதவீதமும் சரிந்துள்ளது.

இதேவேளையில் அடுத்த ஆண்டு வெறும் 2 முறை மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற கணிப்பையும் பெடரல் ரிசர்வ் கணித்துள்ளது. இதோடு அமெரிக்க டாலர் வலுவடைந்ததும், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் மீதான லாபமும் அதிகரித்ததும் தங்க விலையை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதன் எதிரொலியாக சர்வதேச ஸ்பாட்டு சந்தையில் தங்க விலை அவுன்சுக்கு 2637 டாலரில் இருந்து 2,591 டாலராக குறைந்தது. இதேபோல் வெள்ளி விலை 1.6% குறைந்து அவுன்சுக்கு $30.05 ஆகவும், பிளாட்டினம் 1.1% குறைந்து $927.90 ஆகவும், பல்லேடியம் 1.8% குறைந்து $918.23 ஆகவும் குறைந்தது. இதன் தாக்கம் நாளை இந்சிய சந்தையிலும் எதிரொலிக்கும்.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இன்று தனது நாணயக் கொள்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 4.25% முதல் 4.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மற்றும் உலகளாவிய நிதி சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தலைமையிலான 2 நாள் FOMC கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்தில், பெடரல் ரிசர்வ் 50 அடிப்படை புள்ளிகள் என்கிற அதிரடியான வட்டி குறைப்பை அறிவித்தது, அப்போது அமெரிக்காவில் குறைந்து வரும் பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் பணவீக்கம் எனும் பிரச்சனையை எதிர்கொண்டன. பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது. இது பொருளாதார வளர்ச்சியை பாதித்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும்.
இந்த பிரச்சனையை சரிசெய்ய, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக வட்டி விகிதம், மக்கள் மற்றும் நிறுவனங்கள் கடன் வாங்குவதை குறைத்து, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
இருப்பினும், தற்போது பணவீக்கம் கட்டுக்குள் வரத் தொடங்கியதால், பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கத் தொடங்கியுள்ளது. வட்டி விகிதம் குறைவதால், கடன் வாங்குவது எளிதாகிறது. இதன் மூலம், நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும், மக்கள் பொருட்களை வாங்கவும் ஊக்கமளிக்கப்படுவார்கள். இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications