இந்தியாவில் தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டும் கிடையாது. தங்கம் நம் பாரம்பரியத்தோடும் தொடர்புடையது. இந்தியா முழுவதும் அதாவது வடக்கு முதல் தெற்கு வரை அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தின் மீது அலாதியான பற்று வைத்திருக்கின்றனர். திருமணமாக இருந்தாலும் சரி.. பண்டிகையாக இருந்தாலும் சரி.. தங்கம் இல்லாமல் எந்த விசேஷமும் முழுமை அடையாது. நகைகளாகவும், நாணயங்களாகவும் இந்தியக் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக தங்கத்தை குவித்து வருவதற்கான காரணம் இதுதான். இப்படி இருக்கையில் நீங்கள் வாங்கும் தங்கத்தை வருமான வரித்துறை கண்காணிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தங்கம் வைத்திருக்க குறிப்பிட்ட வரம்பை வருமான வரித்துறை நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பை மீறி தங்கம் வைத்திருந்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டில் சோதனை நடத்தலாம். ஒரு வேலை நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் சட்டப்பூர்வ தன்மையை நீங்கள் நிரூபித்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதுவே தங்கம் எங்கிருந்து வந்தது? என்பதை நீங்கள் நிரூபிக்க தவறினால் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பதிவில் ஒவ்வொரு நபரும் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்.. வருமானவரித்துறை சொல்லும் வரம்புகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் தங்கம் வாங்குவது, சேமிப்பது என அனைத்திற்கும் அரசு விதிகளை நிறுவியுள்ளது. இந்த விதிமுறைகளின் படி ஒரு திருமணமான பெண் தன் வீட்டில் 500 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்கலாம்.
வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?: மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தகவல் படி, நீங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அதை எப்படி வாங்கினீர்கள் என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்க வேண்டும்.
பெண்கள் தங்களிடம் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?: வருமான வரிச் சட்டத்தின் படி, திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம். அதேபோல குடும்பத்தில் உள்ள ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பரம்பரை பரம்பரையாக வழங்கப்படும் தங்கத்திற்கு வரி உண்டா?: ஒருவர் இறந்து போகும் பட்சத்தில் அவருடைய அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் அவருடைய வாரிசுகளுக்கு செல்லும். இப்படி வழங்கப்படுவதில் தங்கமும் அடங்கும். இவ்வாறு பரம்பரை பரம்பரையாக வழங்கப்படும் தங்கத்திற்கு வரி விதிக்கப்படுமா? என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி.
விவசாய வருமானம் போன்ற வரி விலக்கு அளிக்கப்பட்ட வருமானத்தில் வாங்கிய தங்கத்திற்கும் வரி கிடையாது. சட்டப்பூர்வமாகப் பரம்பரை சொத்தாக வந்த தங்கத்திற்கும் வரி கிடையாது.
தங்கத்தை வைத்திருப்பதற்கும் வரி உண்டா?: தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும், ஒருவர் தங்கத்தை விற்றால், அதற்கு வரி செலுத்தியாக வேண்டும்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications