ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை அடுத்தடுத்த அதிர்ச்சியை தந்து வருகிறது. கடந்த வாரம் 4 நாட்கள் விலை உயர்ந்த தங்கம் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று லேசாக விலை குறைந்தது. இனி விலை குறைய போகிறது என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் இன்றைய தினம் தடாலடியாக விலை உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,400 ரூபாயும் கிராமுக்கு 300 ரூபாயும் விலை உயர்ந்திருப்பது கடந்த சில மாதங்களில் இதுவே முதன்முறையாகும். ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 994 ரூபாயும் ,சவரனுக்கு 7,952 ரூபாயும் 10 கிராமுக்கு 9,940 ரூபாயும் விலை கூடியுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. ஜனவரி மாதத்திற்கு பின் பெரிய அளவில் உயராமல் ரெஸ்ட் எடுத்து வந்த தங்கம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கி இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு வரலாற்று உச்சத்தை நோக்கி விலை செல்லுமோ என்ற கவலையை தந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 338 ரூபாய் விலை உயர்ந்து 15,546 ரூபாய்க்கும் 10 கிராம் 155,460 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 235 ரூபாய் விலை உயர்ந்து 12,000 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1880 ரூபாய் உயர்ந்து 96,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் சர்ரென விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் தான் இப்படி என்றால் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு கிராம் 260 ரூபாயாக இருக்கிறது. இந்த ஒரு வார காலத்திலேயே வெள்ளியின் விலை கிராமுக்கு 25 ரூபாயும் , ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே வெள்ளியின் விலை பெரிய அளவு உயராத நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவிலான உயர்வை கண்டிருக்கிறது.
உலக சந்தையில் நிகழும் தங்க விலை மாற்றங்களுக்கு ஏற்ப தான் இந்தியாவிலும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் தங்கம் விலை குறைந்தது. ஆனால் தற்போது பெரிய மோதல்கள் இல்லை என்பதாலும் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்ததாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இதனால் தான் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

