தங்கம் விலையில் திங்கட்கிழமை பதிவான சரிவுக்கு பின்பு தொடர்ந்து 2வது நாளாக விலை உயர்ந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் 4430 டாலர் வரையில் சரிந்த ஒரு அவுன்ஸ் தங்கம் வெறும் 2 நாட்களில் 5,082.02 டாலர் வரையில் புதன்கிழமை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் ஈரான் நாட்டில் உருவான பதற்றம் தான்.
கடந்த வாரம் ஏற்பட்ட வரலாற்று ரீதியான கடுமையான ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு பதிவான இந்த உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி வரும் வேளையில் ஈரான் நாட்டில் உருவான பதற்றம் தங்கம் மீண்டும் முக்கிய முதலீடாக மாற்றியுள்ளது.

அரேபிய கடலில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் USS Abraham Lincoln-க்கு அருகில் வேகமாக நெருங்கிய வந்த ஈரான் ட்ரோனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரான் மக்கள் போராட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு பெரும் பிரச்சனையாக இருந்த நிலையில், தற்போது ஈரான் ட்ரோன் அமெரிக்க போர் கப்பலை தாக்க முயன்றுள்ளது. டிரம்ப் ஈரான் நாட்டில் ராணுவ தாக்குதல் மூலம் ஈரான் அரசை கவிழ்க்க மக்களுக்கு உதவி செய்வதாக அறிவித்தார். ஆனால் அமெரிக்க தாக்குதலுக்கு வளைகுடா நாடுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த காரணத்தால் டிரம்ப் பின்வாங்கினார். இதேவேளையில் ஈரானில் மக்கள் போராட்டத்திற்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவமாகவும் மக்கள் கிளம்பினர். இதனால் அமெரிக்காவின் ராணுவ தாக்குதல் பதற்றம், மக்கள் போராட்டம் தொடர்பான பதற்றம் குறைய துவங்கியது.
இந்த சூழ்நிலையில் தான் ஈரான் ட்ரோனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிசீலித்து வருகிறார். இந்த சம்பவம் வளைகுடா சந்தையில் மீண்டும் பாதுகாப்பு சொத்தான தங்கத்திற்கான தேவையை உயர்த்தியுள்ளது.
ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ஓமானில் நடக்க வேண்டும் என்றும், துருக்கியில் வேண்டாம் என்றும் கோரியுள்ளது. அணு திட்டம் தொடர்பான இருதரப்பு பேச்சு இதில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக ஈரான், அமெரிக்கா உடன் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஏற்கனவே சிக்கலான நிலையில் உள்ளதால் முதலீட்டாளர்கள் இந்த பேச்சுவார்த்தையை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதோடு மற்றொரு சம்பவத்தில் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் துப்பாக்கி படகுகள் அமெரிக்க டேங்கரை நெருங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஈரான் - அமெரிக்கா நாடுகள் மத்தியில் இந்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தை சற்று பலவீனப்படுத்தியுள்ளன. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துக்களுக்கு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர். இந்த புவிசார் அச்சுறுத்தல் பாதுகாப்பு சொத்துக்களான தங்கத்தின் மீதான தேவையை மீண்டும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!



Click it and Unblock the Notifications