ரூ.1.60 லட்சத்தை தொட்ட தங்கம்: ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி காட்டும் தங்கம், வெள்ளி விலை..!!

தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3ஆவது வாரமாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தை நோக்கி தங்கம் பயணிக்க தொடங்கியுள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 110 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,17,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ரூ.1.60 லட்சத்தை தொட்ட தங்கம்: ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி காட்டும் தங்கம், வெள்ளி விலை..!!

தங்கம் விலை தொடர்ந்து 6ஆவது நாளாக விலை உயர்ந்து சாமானிய மக்களை கலங்கடிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம்13,256 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால் இன்று 14,710 ரூபாயை தொட்டுப்விட்டது. அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1454 ரூபாயும் சவரனுக்கு 11,632 ரூபாயும் உயர்ந்துள்ளது. 10 கிராமுக்கு 14,540 ரூபாய் விலை கூடியுள்ளது.

Also Read

மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,710 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,680 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திலேயே இன்றைய தினம் தான் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது.24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 110 ரூபாய் விலை உயர்ந்து 16,047 ரூபாய்க்கும் 10 கிராம் 1,60,470 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Recommended For You

வெள்ளியின் விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் விலை கூடி 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 265 ரூபாய் வரை வந்துவிட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 30 ரூபாயும் கிலோவுக்கு 30,000 ரூபயும் விலை கூடியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,541 டாலருக்கு வர்த்தகமாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,60,400 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
q