அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே அதிகரித்துவரும் பதற்றம், உலக முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீட்டு சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளி நோக்கி திருப்பியுள்ளது. ஏற்கனவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வரும் வேளையில், இதுப்போன்ற போர் பதற்றம் தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் வேகமாக உயரக்கூடும் என்ற கணிப்பை சந்தை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் வளைகுடா நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ள மோதல் தீவிரமாவதோ அல்லது தொடர்ந்து நீடிப்பதாலோ, தங்கம் - வெள்ளி விலைகள் வரலாற்று உச்சத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைய எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகத்தில் ஏப்ரல் 2026 முடியும் தங்க ஒப்பந்தம் விலை 10 கிராமுக்கு ரூ.5,811 உயர்ந்து ரூ.1,67,915 ஆக வர்த்தகமானது. இதேபோல் மார்ச் 5, 2026 முடியும் வெள்ளி ஒப்பந்தம் விலை ஒரு கிலோவுக்கு ரூ.9,492 உயர்ந்து ரூ.2,84,490 ஆக உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் 1% உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 5,329.39 டாலராக உள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 2% வரை உயர்ந்து, நான்கு வார உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பாட் வெள்ளி 2%க்கும் மேல் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 95 டாலராக உள்ளது. இது பிப்ரவரி மாத முழு உயர்வையும் தாண்டியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளி மீண்டும் ஒரு அவுன்ஸ்-க்கு 100 டாலருக்கும், தங்கம் விலை 6000 டாலரை எட்டுமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது..? இதற்கு பல முக்கிய சந்தை நிபுணர்கள் முக்கிய கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
தங்கம் விலை 6000 டாலர்
Geojit Investments நிறுவனத்தின் காமாடிட்டி ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹரீஷ் கூறுகையில், அதிகரித்துள்ள சந்தை தடுமாற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் ஆபத்தை தவிர்க்கும் எண்ணம் தங்கத்திற்கு குறுகிய காலகட்டத்தில் ஆதரவாக இருக்கும். மேலும் போர் பதற்றம் தீவிரமாகும் சூழல்நிலையில், உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ்க்கு 6,000 டாலர் வரை செல்லவும், இந்தியாவில் 10 கிராமுக்கு ரூ.2,00,000 வரை உயரவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. மேலும் அது அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் மோதலின் தீவிரம் மற்றும் தாக்குதல் காலத்தைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து IndusInd Securities நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஜிகர் திரிவேதி கூறுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதால் COMEX தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே உலக நாடுகளில் அதிகரித்து வரும் புவிசார் பதற்றம் தங்கம் விலை உயர்வுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் COMEX தங்கம் ஒரு அவுன்சுக்கு $5,500 வரை உயரக்கூடும் என்றும், COMEX வெள்ளி அருகிலுள்ள காலகட்டத்தில் $100 எதிர்ப்பு நிலையை சோதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தங்கத்தின் முக்கிய எதிர்ப்பு நிலைகள்
COMEX தங்கம் தற்போது ஒரு அவுன்ஸ்க்கு 5,300 டாலர் அருகே முக்கிய எதிர்ப்பு நிலையை சந்தித்து வருகிறது. இந்த நிலையை வெற்றிகரமாக கடந்து நிலைத்தால், இந்தியாவில் தங்கம் 10 கிராமுக்கு 1,68,000 முதல் 1,70,000 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா - ஈரான் மோதல் நீடிக்கும் காலமே முக்கிய காரணியாக இருக்கும். ரஷ்யா - உக்ரைன் போர் போன்று இந்த மோதலும் நீண்டால், இந்தியாவில் தங்கம் அதன் முந்தைய சாதனை உச்சமான 1,80,000 அருகே செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி விலை 100 டாலர்
SEBI பதிவு பெற்ற சந்தை நிபுணர் அனுஜ் குப்தா கூறுகையில், COMEX வெள்ளி ஒரு அவுன்சுக்கு 93 டாலருக்கு மேல் முடிந்துள்ளது. தற்போது 95 டாலர் பகுதியில் முக்கிய எதிர்ப்பு நிலை உள்ளது. இந்த நிலையை, வெள்ளி தாண்டி நிலைத்தால், சர்வதேச சந்தையில் மீண்டும் 100 டாலரைஎட்டும் வாய்ப்பு உள்ளது.
அப்படி நடந்தால், இந்திய சந்தையில் வெள்ளி விலை ஒரு கிலோக்கு ₹3,00,000 வரை MCX பியுச்சர்ஸ் விலை உயரக்கூடும். இதற்கு சர்வதேச விலை உயர்வு மட்டுமல்லாமல், ரூபாய் மதிப்பு மாற்றமும் காரணமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
தங்கம் 6000 டாலர் - கள நிலவரம்
INVasset PMS நிறுவனத்தின் மூத்த தலைவர் ஹர்ஷல் தசானி கூறுகையில், அமெரிக்கா - ஈரான் மோதல் தங்கத்திற்கு கூடுதல் ரிஸ்க் பிரீமியம் வழங்குகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டாலோ அல்லது மோதல் நீண்ட கால போராக மாறினாலோ தங்க விலை மேலும் உயரும்.
ஆனால் தங்கத்தின் ஏற்றம் முழுக்க போர் காரணமாக மட்டுமல்ல. உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், வட்டி விகித குறைப்பில் ஏற்பட்டு உள்ள மந்தநிலை, அமெரிக்க டாலரிலிருந்து உலகளாவிய முதலீட்டு பரவல், ETF முதலீட்டு வரவுகள் ஆகிய அடிப்படை காரணிகளும் தங்கத்தின் விலையை உயர்த்துகின்றன. இந்த சூழலில், அடுத்த 12 - 18 மாதங்களில் 6,000 டாலர் என்ற இலக்கை அடையும் பாதையை முற்றிலும் மறுக்க முடியாதது என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் சர்வதேச சந்தையில் 6,000 டாலர் எட்டினாலே இந்தியாவில் 10 கிராமுக்கு 2 லட்சம் ரூபாய் அளவீட்டை தானாக எட்டிவிடாது. அதற்கு சர்வதேச சந்தை விலை 6,000 டாலர் மேல் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பலவீனமடைய வேண்டும், மேலும் உள்நாட்டு பிரீமியம் உயர்ந்திருக்க வேண்டும். இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் 2 லட்சம் ரூபாய் என்பது அருகிலுள்ள காலகட்டத்தில் கடுமையான மாக்ரோ பொருளாதார அழுத்தம் இருந்தால் மட்டுமே சாத்தியம் என அவர் விளக்கியுள்ளார்.
குறுகியகால ஏற்றமா? நீண்டகால வாய்ப்பா?
இந்த பதற்றம் நீடித்தால் தங்கம் தொடர்ந்து விலை உயரும் போக்கு தொடரலாம். எனினும் திடீர் உயர்வுகள் பெரும்பாலும் தற்காலிகமாக இருக்கும். மொத்தத்தில், வெள்ளி விலை 95 டாலரை தாண்டி நிலைத்தால் 100 டாலரை மீண்டும் எட்டலாம். தங்கம் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்தால் $5,500 நோக்கி நகரலாம். இப்போர் தீவிரம் அடைந்தாலோ அல்லது நீண்டகாலத்தில் $6,000 மற்றும் இந்தியாவில் 2 லட்சம் வரையில் உய இலக்கு தீவிரமான சூழலில் சாத்தியமாகும்.
அமெரிக்கா - ஈரான் மோதலின் நீடிப்பு மற்றும் தீவிரம்தான் தங்கம், வெள்ளி விலைகளின் அடுத்த பெரிய திசையை தீர்மானிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications