பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது யூடியூப் வீடியோவில் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.18,000 வரை உயரும் என்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கணிப்பு தமிழ்நாட்டில் தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் தங்கம் வாங்கும் மக்கள் இந்த கணிப்பை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தங்கம் விலை இன்று ஏற்ற இறக்கம்
தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று தங்கம் சுமார் ரூ.200 உயர்ந்த நிலையில், இன்று ரூ.190 வரை குறைந்து, பின்னர் அதே அளவுக்கு மீண்டும் திரும்பியுள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 22 காரட் 10 கிராம் தங்கம் விலை 14600 ரூபாய்க்கும், 24 காரட் தங்கம் ரூ.16,000-ஐ தாண்டிய பிறகு, ரூ.15,928-க்கு திரும்பியுள்ளது. இந்த ஏற்ற இறக்கங்கள் சாதாரண மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இதை மாற்றத்தை கட்டாயம் கவனிக்க வேண்டும் எனவும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்துகிறார்.
இதேபோல் தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்கு ஏற்றமும், இறக்கமுமாகவே தொடர்ந்து இருக்கும் என்பது அவருடைய கருத்து என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இதேபோல் வருட இறுதியில் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், 24 கேரட் தங்கம் விலை 17500 முதல் 18000 ரூபாய் வரையில் உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவு முக்கிய காரணம்
அமெரிக்காவில் ஜனவரி 2026 வேலைவாய்ப்பு தரவு எதிர்பார்த்ததை விட வலுவாக வந்துள்ளது. இதனால் உடனடி வட்டி விகித குறைப்பு (Rate Cut) எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலையில் ஆண்டு இறுதியில் மட்டும் சிறிய உயர்வு ஏற்படும் சாத்தியம் உள்ளது. இந்த தரவுகள் தங்கம் விலையின் திசையை தீர்மானிக்கும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். மேலும் 18000 ரூபாய் வரையில் உயரும் என்பது தற்போதயை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணிப்பு மட்டுமே, உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சீனா, ஈரான் போன்ற நாடுகளில் பதற்றம் ஏற்பட்டால் என்ன?
மேலும் சீனா அல்லது ஈரான் போன்ற நாடுகளில் திடீர் அரசியல் அல்லது போர் சம்பவங்கள் நடந்தால் தங்கம் விலை திடீரென உயரக்கூடும். ஆனால் அத்தகைய பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால், தங்கம் இன்னும் சில மாதங்கள் இதே விலைக்கட்டத்திலேயே நகரும். ஆண்டு இறுதிக்குள் ரூ.18,000 அளவை எட்டும் சாத்தியம் இருப்பதாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன அர்த்தம்?
ரூ.18,000 வரை விலை உயரும் என்ற கணிப்பு, தமிழ்நாட்டில் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அல்லது சிறு அளவில் வாங்கும் முடிவை எடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. உள்ளூர் நகைக்கடை உரிமையாளர்களும் விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அமெரிக்க பெட் முடிவு
அமெரிக்காவின் ஜனவரி 2026 வேலைவாய்ப்பு தரவு. ஜனவரி மாதம் 1,30,000 புதிய வேலைவாய்ப்புகள் சேர்ந்தன, சந்தை எதிர்பார்த்த 70,000-ஐ விட அதிகம். மேலும் வேலையின்மை விகிதமும் எதிர்பாராத விதமாக குறைந்தது. இது அமெரிக்க தொழிலாளர் சந்தை வலுவாக மீண்டு வருவதை காட்டுகிறது.
இதனால் அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதத்தை விரைவில் குறைக்காது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஜூன் மாத வட்டி குறைப்பு நம்பிக்கை ஜூலைக்கு தள்ளப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம்-வெள்ளி மீதான ஆர்வத்தை குறைத்தனர்.
மேலும் வட்டி குறைப்பு தொடர்பான நிலைமை மேலும் தெளிவாக அறிய வேண்டுமெனில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் காங்கிரஸில் வழங்கும் உரைகளும்,புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள கெவின் வார்ஷ்-ன் தேர்வு முடிவுகளும், அவரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச்சும் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் வெளியிடும் கருத்துகள் சந்தை திசையை மாற்றக்கூடும் என ஆனந்த் தெரிவித்தார்.
வெள்ளி மீது எச்சரிக்கை
வெள்ளி குறித்து இப்போது முழுமையான தெளிவான தகவல்கள் இல்லை. எனவே வெள்ளி முதலீட்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார். டாலர் மதிப்பு 90.50 அளவில் நிலைத்திருக்கிறது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆதரவு வழங்கி வருகிறது.
முதலீட்டாளர்களுக்கு அறிவுரை
ஒட்டுமொத்த சந்தையும் தற்போது நிலைதடுமாறும் சூழலில் உள்ளது. முதலீட்டாளர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல், கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications