தங்கம், வெள்ளி விலை பெரும் சரிவில் இருந்து மீண்டு வரும் வேளையில் உலகளவில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜேபி மார்கன் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஜேபி மார்கன் நிதி நிறுவனம் 2026 இறுதிக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 6,300 டாலராக உயரும் என்று கணித்துள்ளது. அதாவது டாலர் மதிப்பு 90.27 ரூபாய் அடிப்படையில் கணக்கிடம் போதும் ஒரு கிராம் தங்கம் விலை 18284 ரூபாய் வரையில் உயரும் என கணித்துள்ளது. இன்று கிராமுக்கு 349 ரூபாய் உயர்ந்து 15,567 ரூபாயாக இருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 3000 ரூபாய் கிராமுக்கு உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த உயர்வுக்கான காரணத்தையும் ஜேபி மார்கன் பட்டியலிட்டு உள்ளது, உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கும் எனவும், முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவான தேவை இருக்கும் என பட்டியலிட்டு உள்ளது.
உலக நாடுகள் தங்கள் கையிருப்பை தங்கம் போன்ற முக்கிய சொத்துக்களுக்கு மாற்றி வருவது இதற்கு அடிப்படை காரணம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026இல் மத்திய வங்கிகள் சுமார் 800 டன் தங்கத்தை வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தங்கம் விலை கடுமையான சரிவை சந்தித்தது. 5,594.82 டாலர் என்ற உச்சத்தில் இருந்து 4,677.17 டாலருக்கு வீழ்ந்தது. இது 5 சதவீதத்திற்கு மேல் ஒரே நாளில் சரிந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) விலை 6.2 சதவீதம் உயர்ந்து 4,930.10 டாலருக்கு வந்தது.
இது பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் சரிவுக்குப் பிறகு ஏற்பட்ட உயர்வாகும். அமெரிக்க டாலர் பலவீனமடைந்தது மற்றும் புவிசார் பதற்றம் குறைந்ததால் பாதுகாப்பு சொத்தான தங்கத்திற்கு தேவை அதிகரித்தது. தற்போது டாலர் மதிப்பு சரிந்து வருவது இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

வெள்ளி விலையும் 11.4 சதவீதம் உயர்ந்து 88 டாலருக்கு மேல் சென்றது. கடந்த டிசம்பர் இறுதியில் 80 டாலர் அருகே இருந்த வெள்ளி விலை இப்போது மீண்டுள்ளது. ஆனால் வெள்ளிக்கு தங்கத்தைப் போல தெளிவான தேவை இல்லை என்று ஜேபி மார்கன் கூறியுள்ளது.
சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,567ஆகவும், 22 கேரட் ரூ.14,270ஆகவும், 18 கேரட் ரூ.12,210ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.300ஆகவும், 1 கிலோ ரூ.3,00,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.63,130ஆக வர்த்தகமாகிறது.
சென்னை நகை வாங்குபவர்கள் இந்த மாற்றங்களை கவனித்து முடிவெடுக்கலாம். தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய திட்டமிட்டவர்கள் தினசரி விலை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம். பிளாட்டினம் விலை நிலையாக இருப்பதால் அதில் முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம், ஆனால் டிமாண்ட் குறைவாக இருப்பதால் விலை உயர்வில் தடுமாற்றம் வரலாம்.
கோயம்புத்தூரில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,393ஆகவும், 22 கேரட் ரூ.14,110ஆகவும், 18 கேரட் ரூ.11,545ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.63,130ஆக வர்த்தகமாகிறது.


Click it and Unblock the Notifications