அடித்து சொல்லும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.. தங்கம் விலையின் எதிர்காலம் இதுதான்.. வேண்டாத வேலை செய்த Trump..!

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தங்கம் விலையின் எதிர்காலம் குறித்து பேசுகையில், தங்கம் விலை இன்று 90 ரூபாய் குறைந்து 14,230 ரூபாயாக உள்ளது. சீனாவில் லூனார் விடுமுறைகள் காரணமாக வர்த்தகம் மந்தமாக உள்ளது, இது இன்னும் சில நாட்கள் தொடரலாம். தங்கம் விலை அதிகபட்சம் 1,000 ரூபாய் குறைந்து 13,000 வரை செல்லலாம். இதனால் 22 கேரட் தங்கம் விலை 1200 வரை இறங்கிலாம், ஆனால் 12,500 ரூபாய் தான் அடிப்படை விலை என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணிக்கிறார்.

இதேபோல் தங்கம் விலை உயர்வுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அடித்து சொல்கிறார். இதற்கு 2 முக்கிய காரணத்தை ஆனந்த் ஸ்ரீனிவாசன் முன்வைக்கிறார். ஒன்று கெவின் வார்ஷ், மற்றொன்ரு டிரம்ப் செய்த உட்டாலக்கடி வேலை.

அடித்து சொல்லும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.. தங்கம் விலை எதிர்காலம் இதுதான்! டிரம்ப் செய்த உட்டாலக்கடி வேலை

டிரம்ப் போர் செலவுகள்
டிரம்ப் ஆட்சியில் வெனிசூலா மீதான ராணுவ தாக்குதல், கிரீன்லாந்தில் அமெரிக்க படைகளை இறக்கியது, ஈரான் கப்பலை நிறுத்தியது போன்ற செயல்களால் பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. இவை அனைத்தும் கடன் வாங்கி செய்யப்படுகின்றன, ஏனெனில் வரி பணத்தில் இதைச் செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள், நாடாளுமன்றத்திலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.

இத்தகைய போர் சார்ந்த செலவுகள் மூலம் கடன் அதிகரிக்கும் காரணத்தால் அமெரிக்காவின் பண பற்றாக்குறையை உயர்த்தும், இதனால் விலைவாசி அதிகரிக்கும். இது இரண்டும் தங்கத்துக்கு நல்லது, ஏனெனில் பணவீக்க காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதனால் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ஆனால் இந்த தாக்கம் உடனடியாக இல்லாமல், மிகவும் பொறுமையாகவே வர்த்தக சந்தையில் வெளிப்படும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கியுள்ளார்.

அமெரிக்க ரேட் கட்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவராக கெவின் வார்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டு முறை வட்டி விகித குறைப்பு செய்தால், தங்கம் விலை 2,000 ரூபாய் உயரலாம் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார். இதுதான் தங்கத்தின் உண்மையான உணர்வு என்றும் அவர் கூறுகிறார். தற்போதைய போக்கில் தங்கம் இந்த உயர்வை எதிர்பார்க்கலாம். அமெரிக்காவின் நாணய கொள்கை மற்றும் பணவீக்கம் தான் தங்க விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்.

ஈரான் பேச்சுவார்த்தை
அமெரிக்கா ஈரான் உடந் இன்று அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் குண்டுகளை வீசினால் தங்க விலையில் பெரும் மாற்றம் வரும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கிறார். ஜியோபாலிடிக்ஸ் (geopolitics) போன்ற சர்வதேச அரசியல் சம்பவங்கள் தங்க விலையை நேரடியாக பாதிக்கும். அமெரிக்கா-சீனா உறவு, அமெரிக்கா-ரஷ்யா-சீனா சமன்பாடு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடன் நிலை, நாணய இயக்கங்கள் போன்றவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கும்.

மொத்தத்தில், ஆனந்த் ஸ்ரீனிவாசனின் கணிப்பு தங்க விலையின் எதிர்கால போக்கு குறித்த ஒரு அவுட்டர் வியூவ் கொடுத்துள்ளது, ஆனால் இதேவேளையில் அமெரிக்க சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+