தங்கம் விலையானது கடந்த பிப்ரவரி மாதத்தில் 5% மேலாக சரிவினைக் கண்டுள்ள நிலையில், வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையில் மேலும் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிப்பானது இன்னும் பல முறை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலையானது இன்னும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம்.
எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.
சாதகமான வேலை தரவுகள்
கடந்த ஜனவரி மாதத்தில் 5.17 லட்சம் வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கடந்த டிசம்பரில் 2.33 லட்சம் ஆக இருந்தது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வேலையின்மை விகிதமானது கடந்த ஜனவரி மாதத்தில் 53 வருட குறைந்தபட்ச மதிப்பானது 3.4% ஆக இருந்தது.
தொடர்ந்து பணவீக்க விகிதத்தினை குறைத்தாலும், வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என ஜெரோம் பவல் முன்னதாக கூறியிருந்தது நினைவுக் கூறத்தக்கது. ஆக இது தங்கம் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
டாலரின் மதிப்பு
தொடர்ந்து வலுவடைந்து வரும் டாலரின் மதிப்பும் தங்கம் விலை ஏற்றத்தினை தடுக்கின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது. எப்படியிருப்பினும் வரவிருக்கும் தரவுகள் முக்கிய கவனம் பெற்ற ஒன்றாக உள்ளது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதாரவாக வருமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
கவர்ச்சிகரமான ஒன்று
எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டின் இறுதியிலும் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், தங்கம் விலையானது ஏற்றத்தினை காணலாம். இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கத்தினை கவர்ச்சிகரமானதாக மாற்றலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1853.20 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை.. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து 21.148 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை இதுவரையில் உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இன்று விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வானது உள்ளது. இது மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆக இன்று ப்யூச்சர் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகம் இருக்கலாம். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5235 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 41,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5711 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 57,110 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று குறைந்தே காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 60 பைசா குறைந்து, 70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரகுறைந்து, 70,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications