அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. இது டிரம்புக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு எதிராக வெளியாக தொடங்கியது முதலே உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் எகிற தொடங்கின.
டிரம்ப் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் இனி ஈரான் போர் உள்ளிட்ட விவகாரங்களில் அவரது நடவடிக்கைகளுக்கு ஜனநாயக கட்சி முட்டுக்கட்டை போடும். எனவே டிரம்ப் பல நெருக்கடிகளை சந்திக்க இருக்கும் என்பதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரசரவென சரிய தொடங்கியது. ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 93 டாலர்களாக குறைந்துவிட்டது. ஆனால் அதே வேளையில் தங்கம், வெள்ளி விலைகள் டாப் கியரில் எகிற தொடங்கி விட்டன.

அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் காரணமாக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய், டாலர் உள்ளிட்டவற்றை எல்லாம் விடுத்து பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது பணத்தை போட தொடங்கி விட்டனர். இதனால் தான் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன.
உலக சந்தையில் ஒரே நாளில் தங்கம் விலை 5.11% உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக 4,000 டாலருக்கு கீழ் தான் வர்த்தகமாகி வந்தது. ஆனால் அமெரிக்க தேர்தல் முடிவு வெளியான உடனேயே தங்கம் விலை உயர தொடங்கியது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 200 டாலர்கள் உயர்ந்து 4,129 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. 24 மணி நேரத்தில் தங்கம் விலை 5.11% உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 24 மணி நேரத்தில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு 7% உயர்ந்து, 53.3 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் நிச்சயம் இன்று தங்கம் விலை உயரும். நேற்றே சென்னையில் சில்லறை விற்பனையில் தங்கம் விலை காலை, மாலை என இரண்டு வேளையும் உயர்வு கண்டது.
தமிழ்நாட்டில் நேற்று மாலை ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 13,100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 2,400 ரூபாய் விலை கூடி 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 210 ரூபாய்க்கும் கிலோவுக்கு 10,000 ரூபாய் உயர்ந்து 2.10 லட்சத்திற்கும் விற்பனையானது.
உலக சந்தையில் தங்கம் தொடர்ந்து ஏற்றத்துடனே இருப்பதால் இன்றைய தினம் தமிழ்நாட்டில் நிச்சயம் தங்கம் விலை உயரும். எனவே தீபாவளியில் தங்கம் விலை குறையும் வாங்கி கொள்ளலாம் என காத்திருந்தவர்களுக்கு இன்று தங்கம் விலை அதிர்ச்சி தருவதாக அமையும்.
அமெரிக்க டாலர் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயரும். அப்படித்தான் டிரம்பின் பின்னடைவு அமெரிக்க டாலர் மதிப்பை குறைய செய்து தங்கம் விலையை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் நேற்றே எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை காலை வர்த்தகம் தொடங்கும் போது 1,39,000 ரூபாய் என்ற விலையில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 1,43,300 ரூபாய் என ஆனது. வெள்ளியின் ஒரு கிலோ காலை வர்த்தகம் தொடங்கும் போது 1.78 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட 7000 ரூபாய் அதிகரித்து 1,87,000 ரூபாய் என்ற விலையை அடைந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

