புதிய முறையில் தங்கம் கடத்த முயற்சி.. அதுவும் அந்த இடத்தில் வைத்தா.. புது ரகமால்ல இருக்கு..!

இந்தியர்களின் நல்ல காரியங்களில் தவறாமல் இடம் பிடிக்கும் மஞ்சள் உலோகம் தான், இந்த தங்கம்.

இந்தியர்கள் இன்று வாங்கும் தங்கம் எல்லாம் இந்தியாவில் கிடைப்பவை அல்ல. பெரும்பாலான தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு முறையாக நிறைய வரி செலுத்த வேண்டி இருக்கும்.

கடத்தல்

கடத்தல்

பொதுவாக இந்தியாவில் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக, தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தும் வழக்கம் இருக்கிறது. அதை அவ்வப் போது செய்திகளிலும் படித்து இருப்போம். இப்போதும் ஒரு நபர் தங்கத்தை மிக வித்தியாசமாக கடத்த முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.

1.5 கிலோ தங்கம்

1.5 கிலோ தங்கம்

இதே போல சமீபத்தில், ஹைதராபாத்தில் வைத்து ஒருவர் 1.5 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். இவர் தன் தங்கத்தை சில மாற்றங்களுடன் இருக்கும் மோட்டாரில் மறைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட பின் தங்கம் எப்படி வந்தது என்கிற கேள்விக்கு முறையாக பதில் சொல்லவிலையாம்.

2 கிலோ தங்கம்

2 கிலோ தங்கம்

அவ்வளவு ஏன், நம் சென்னையில் கூட, இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஒரு சுத்தம் செய்யும் பணியாளரிடம் இருந்து 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரித்ததில், ஒரு பெண் பயணி தான் தன்னிடம் கொடுத்து வெளியே கொண்டு வரச் சொன்னார் என்று சொல்லி இருக்கிறார். இதெல்லாம் வழக்கமான முறை தான். நாம் சொன்ன வித்தியாசமான முறையில் தங்கத்தைக் கடத்த முயற்சி செய்த விஷயத்துக்கு வருவோம்.

சென்னை டூ திருவனந்தபுரம்

சென்னை டூ திருவனந்தபுரம்

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில், ஒரு பயணி சென்னையில் இருந்து கேரளாவின் தலை நகரான திருவனந்தபுரத்துக்கு விமானம் ஏற தயராகிக் கொண்டு இருந்திருக்கிறார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழ, அவரை விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் தனியாக அழைத்து விசாரித்து சோதனை செய்து இருக்கிறார்கள். அப்போது தான் தங்கம் சிக்கி இருக்கிறது.

தங்கம்

தங்கம்

பொதுவாக தங்கத்தை கட்டியாகவோ அல்லது காசாகவோ தான் கொண்டு வருவார்கள். ஆனால் இந்த நபர் கொஞ்சம் வித்தியாசமாக தங்கத்தை கொண்டு வந்து இருக்கிறார். தங்கம் பேஸ்டாக இருந்து இருக்கிறது. என்னது தங்க பேஸ்டா என ஷாக் ஆகிறீர்களா..? அப்படித் தான் விமான நிலைய அதிகாரிகளும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

எங்கு வைத்து

எங்கு வைத்து

மனிதர், இந்த தங்க பேஸ்டை, தன் மலக் குடலில் இருக்கும் ஆசன வாயில் (Rectum) வைத்து கடத்த முயற்சி செய்து இருக்கிறார். மொத்தம் 3 பாக்கெட் தங்க பேஸ்டாம். எடை போட்டுப் பார்த்தால் சுமார் 350 கிராம் தேறியதாம். இதன் மொத்த மதிப்பு சுமாராக 14.80 லட்சம் ரூபாய் வரும் என அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+