சென்னையில் இன்று தங்கம் விலை 200 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 14600 ரூபாய் வரையில் சென்றது மட்டும் அல்லாமல் 5 நாட்களாக தொடர்ந்து உயர்வுடன் இருக்கிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் 20 நாளில் 10.14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஜூலை மாதம் முழுவதும் பதிவான 0.03 சதவீத வளளர்ச்சியை ஒப்பிடும் போது இது மிகப்பெரிய உயர்வாக பார்க்கப்பட்டாலும் சர்வதேச சந்தையில் நிலைமை தலைகீழாக மாறி வருகிறது.
இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4527.67 டாலரில் இருந்து 4477.96 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் நேற்றைய வர்த்தகத்தில் ஜூன் மாதத்திற்கு பின்பு பதிவு செய்த உயர்வை இழந்துள்ளது. இந்த சரிவுக்கு மிக முக்கியமான காரணம் நேற்று வெளியான அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அமைப்பின் நாணய கொள்கை கூட்டத்தின் விவாதங்கள் வெளியாகியுள்ளது.

இதில் அமெரிக்காவின் பணவீக்கம் குறையாவிட்டால் விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கும் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதோடு அமெரிக்க பத்திர முதலீடுகள் மீதான லாபம் பெரிய அளவில் குறையும் என தெரிவித்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் டாலர் விற்பனை அதிகரித்து தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிய துவங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.
இதனால் இந்திய ரீடைல் சந்தையிலும், பியூச்சர்ஸ் சந்தையிலும் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மொத்த சந்தையும் கச்சா எண்ணெய் விலை மற்றும் மத்திய கிழக்கு போரை நம்பி தான் இயங்கி வருகிறது. அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போர் அச்சம் குறைந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தால் போதும், மொத்த சந்தையும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக டாலர் மதிப்பு உயர்வது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது.
ஆனால் டாலர் உயர்வு இந்தியாவில் தங்கம் விலையை உயர்த்தி வருகிறது என்பதை மறந்திட கூடாது. இந்தியாவில் இருக்கும் பண்டிகை கால டிமாண்ட் குறைந்தால் கட்டாயம் சர்வதேச சந்தைக்கு இணையாக இயங்க துவங்கும் என்பது தான் சந்தை வல்லுனர்களின் முக்கிய கணிப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
